கிரிக்கெட்

மாஸ்டர் பிளாஸ்டருக்கு 51-வது பிறந்தநாள்

Published On 2024-04-24 08:09 GMT   |   Update On 2024-04-24 08:09 GMT
  • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
  • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

Tags:    

Similar News