கிரிக்கெட் (Cricket)

அரிய சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின்

Published On 2024-02-23 18:39 IST   |   Update On 2024-02-23 18:39:00 IST
  • இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
  • இதன் மூலம் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News