என் மலர்
கிசுகிசு
வனமான படத்தில் அறிமுகமான நடிகைக்கு, அடுத்தடுத்து இளம் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறாராம். முதல் படத்திலேயே பெயர் பெற்றதால், இளம் நடிகர்களுக்கு இணைய எளிதாக வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.
வனமான படத்தில் அறிமுகமான நடிகைக்கு, அடுத்தடுத்து இளம் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறாராம். முதல் படத்திலேயே பெயர் பெற்றதால், இளம் நடிகர்களுக்கு இணைய எளிதாக வாய்ப்பு கிடைத்து விட்டதாம். நடிகை அடுத்ததாக தல, தளபதி படங்களில் நடிக்க வலைவீசி இருக்கிறாராம்.
இவர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சி அவசியம் என்று நெருக்கமானவகள் அறிவுரை கூறியிருக்கிறார்களாம். அதைத்தொடர்ந்து அந்த மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.
நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறி இயக்குனராக இருக்கும் நடிகரும், தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகையும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம்.
நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறி இயக்குனராக இருக்கும் நடிகரும், தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகையும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம். திருமணம் வரைக்கும் சென்று இருவரும் பிரிந்தார்களாம். நடிகை தற்போது மற்றொரு இயக்குனரை காதலித்து வருகிறாராம்.
இந்நிலையில், நடன இயக்குனர் தற்போது பெரிய நடிகரை வைத்து படம் இயக்க முடிவு செய்தாராம். இதற்கு முன்னாள் காதலியை
கதாநாயகியாக முயற்சி செய்தாராம். இதற்காக நடிகையிடம் படக்குழுவை சேர்ந்த ஒருவர் தூது போனாராம். நடிகையும் கதை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.
நடிகை அந்த படத்தில் நடிப்பார் என்று படக்குழுவினர் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகை மறுத்து விட்டாராம். நடன இயக்குனருக்கு முன்பு காதலித்தவரை நான் நண்பராக பார்த்தேன். அதனால், அவருடன் நடித்தேன். ஆனால், நடன இயக்குனரை என் வாழ்க்கையாக பார்த்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவர் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் நடிகை.
முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம்.
முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம். ஆனால், நடிகை கதை தேர்வில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம்.
ஆனால், நடிகை திருப்தியடைய வில்லையாம். எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். ஆனால், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குனர்கள் விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்!
புருவ அசைவு மூலம் மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்தாராம் அந்த நடிகை. இவர் நடித்த படம் இன்னும் வெளியில் கூட வரவில்லையாம்.
புருவ அசைவு மூலம் மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்தாராம் அந்த நடிகை. இவர் நடித்த படம் இன்னும் வெளியில் கூட வரவில்லையாம். ஆனால், நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பாம். இவரை தமிழில் நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
இந்நிலையில், ஒரு படக்குழுவினர் தங்களுடைய படத்தின் போஸ்டரை வெளியிடும் படி கேட்டுக் கொண்டார்களாம். நடிகையும் சரி என்று சொன்னாராம். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் நேரத்தில் நடிகை வெளியிட வில்லையாம். நடிகையின் போன் நம்பரை தொடர்பு கொண்டால் கிடைக்கவில்லையாம், இதனால், படக்குழுவினர் பதறிவிட்டார்களாம். பின்னர் சிறிது நேரம் கழித்து நடிகை பட போஸ்டரை வெளியிட்டாராம்.
முன்னணி நடிகையாக வலம் வரும் பெரிய நம்பர் நடிகை, கடவுள் பெயரை கொண்ட இயக்குனரை காதலித்து வருகிறாராம். அவரையே இந்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறாராம்.
முன்னணி நடிகையாக வலம் வரும் பெரிய நம்பர் நடிகை, கடவுள் பெயரை கொண்ட இயக்குனரை காதலித்து வருகிறாராம். அவரையே இந்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறாராம். இதற்கிடையே அவர்களுக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறதாம்.
நடிகைக்கு தனது காதலரை ஹீரோவாக்கிப் பார்க்கும் ஆசை வந்துள்ளதாம். இதற்காக காதலரை வைத்து படம் தயாரிக்க இருக்கிறாராம் நடிகை. காதலருக்காக நடிகை செய்யும் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளதாம். காதல் விஷயத்தில் நடிகை காசு, பணம் பார்ப்பது இல்லையாம். எவ்வளவு பெரிய பட்ஜெட் என்றாலும் தயாரிக்க தயாராக இருக்கிறாராம் நடிகை.
சமவெளி நடிகை, ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதையும், கதை கேட்பதையும் நிறுத்திக் கொண்டாராம். இரண்டையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாராம்.
சமவெளி நடிகை, ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதையும், கதை கேட்பதையும் நிறுத்திக் கொண்டாராம். இரண்டையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறாராம். ஓட்டல்களுக்கு “பை..பை..” சொல்லி விட்டாராம்.
உன்னை தேடி வந்து சங்கடப்படுத்தும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், வெளியில் சுற்றாதே என்று நெருங்கிய நண்பர்கள் சொன்னதை சமவெளி நடிகை வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறாராம். நண்பர்களின் அறிவுரையை பின்பற்ற தொடங்கிய பின், மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறதாம்!
மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.
மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால், நடிகை குறிப்பிட்ட ஒரு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறாராம்.
ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்த்து வைக்கிறாராம். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியும் நடிகை மறுத்து விட்டாராம்.
இஞ்சி இடுப்பழகியான அழகான பெரிய நடிகை முறைப்படி யோகா கற்றவராம். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்து வருகிறாராம்.
இஞ்சி இடுப்பழகியான அழகான பெரிய நடிகை முறைப்படி யோகா கற்றவராம். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்து வருகிறாராம். யோகா செய்த மாயமோ என்னவோ, அவர் கோபப்படுவதே இல்லையாம். எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் இல்லையாம். அதிர்ச்சி தகவல்களை கூட, அமைதியாகவே கேட்கிறாராம்.
சக நாயகிகளைப் பார்த்து இவர் பொறாமைப்படுவதும் இல்லையாம். இத்தனை பரந்த மனசுக்காரருக்கு சுலபமாக மாப்பிள்ளை அமைய மாட்டேன்கிறதாம். தேடுகிறார்கள்... தேடுகிறார்கள்... தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்.
இசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம்.
இசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம். அழகு இருக்கிறது, திறமை இருக்கிறது என்று அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்கிறாராம். சமீபத்தில் நடிகையை தயாரிப்பாளர் ஒருவர் அணுகி இருக்கிறாராம்.
நான் தயாரிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு கதை கேட்கிறேன் என்று தயாரிப்பாளரை இரண்டு வாரமாக அலைய வைத்திருக்கிறாராம். மேலும் கதை கேட்பதற்கு முன்பே என்னுடைய சம்பளம் 80 லட்சம், அதற்கு சரி என்றால் கதை சொல்ல வாருங்கள் என்று கூறியிருக்கிறாராம்.
இதைக்கேட்ட தயாரிப்பாளர் நடிகைக்கு பெரிய சொல்லும் அளவிற்கு எந்தப் படமும் வரவில்லையாம். அதற்குள் இப்படி நடந்துக் கொள்கிறாரே என்று மிரண்டு போய், கதை சொல்லமலே சென்றிருக்கிறாராம்.
தமிழில் ராஜதந்திரமாக வந்த நடிகைக்கும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்ததாம். ஆனால், நடிகை எதிர்பார்த்தபடி எந்த பட வாய்ப்பும் அமையவில்லையாம்.
தமிழில் ராஜதந்திரமாக வந்த நடிகைக்கும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்ததாம். ஆனால், நடிகை எதிர்பார்த்தபடி எந்த பட வாய்ப்பும் அமையவில்லையாம். தமிழில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடித்து வரும் படத்தில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறாராம்.
சமீபத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்தவர்கள், இந்த முறை நடிகை இடம் பிடித்துவார் போல, என்று பேசி வருகிறார்களாம். மேலும் சக நடிகைகள் இரண்டு புகைப்படங்களே இப்படி இருக்கிறதே, படம் முழுவதும் நிறைய கவர்ச்சி காட்டியிருப்பாரோ என்று போறாமைப் பட்டு வருகிறார்களாம்.
பழைய படத்தை காப்பி அடித்து வெற்றி கொடுத்த இளம் இயக்குனர், அடுத்தடுத்து தளபதியாரை இயக்கி முன்னணி இயக்குனரானாராம்.
பழைய படத்தை காப்பி அடித்து வெற்றி கொடுத்த இளம் இயக்குனர், அடுத்தடுத்து தளபதியாரை இயக்கி முன்னணி இயக்குனரானாராம். இவர் அடுத்ததாக மீண்டும் தளபதியார் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் கைவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது தெரியாமல் இருந்த இயக்குனர், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டவர் அடுத்ததாக நேரடியான தெலுங்கு படத்தை இயக்குவதாக கூறினாராம். மேலும் பெரிய ஹீரோ கதாநாயகனாக நடிக்க போவதாகவும் கூறினாராம்.
மற்றொரு விழாவில் நான் தமிழ் படம் தான் இயக்க போறேன் என்று கூறினாராம். இதைக்கேட்ட அனைவரும் இயக்குனர் ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார் என்று பேசிக்கொண்டார்களாம்.
‘சாமி’ நடிகரின் தற்போதைய சம்பளம், ரூ.3 கோடி! கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நட்பின் அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.
‘சாமி’ நடிகரின் தற்போதைய சம்பளம், ரூ.3 கோடி! கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நட்பின் அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தாராம். தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் முன்பணமாக நடிகரிடம் கொடுத்தாராம். மீதி பணத்தை ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தாராம்.
அவர் சொன்னபடி, மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். “இதோ கொடுக்கிறேன்...அதோ கொடுக்கிறேன்” என்று இழுத்தடித்ததால் படத்துக்கு, ‘டப்பிங்’ பேச மறுத்து விட்டாராம், ‘சாமி’ நடிகர். “இரண்டே கால் கோடியை கொடுங்கள். உடனே ‘டப்பிங்’ பேச வருகிறேன்” என்று அவர் நிபந்தனை விதித்து இருக்கிறாராம்!






