என் மலர்tooltip icon

    சினிமா

    முன்னாள் காதலர் படத்தில் நடிக்க மறுக்க இதுதான் காரணமா?
    X

    முன்னாள் காதலர் படத்தில் நடிக்க மறுக்க இதுதான் காரணமா?

    நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறி இயக்குனராக இருக்கும் நடிகரும், தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகையும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம்.
    நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறி இயக்குனராக இருக்கும் நடிகரும், தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகையும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்களாம். திருமணம் வரைக்கும் சென்று இருவரும் பிரிந்தார்களாம். நடிகை தற்போது மற்றொரு இயக்குனரை காதலித்து வருகிறாராம்.

    இந்நிலையில், நடன இயக்குனர் தற்போது பெரிய நடிகரை வைத்து படம் இயக்க முடிவு செய்தாராம். இதற்கு முன்னாள் காதலியை
    கதாநாயகியாக முயற்சி செய்தாராம். இதற்காக நடிகையிடம் படக்குழுவை சேர்ந்த ஒருவர் தூது போனாராம். நடிகையும் கதை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

    நடிகை அந்த படத்தில் நடிப்பார் என்று படக்குழுவினர் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகை மறுத்து விட்டாராம். நடன இயக்குனருக்கு முன்பு காதலித்தவரை நான் நண்பராக பார்த்தேன். அதனால், அவருடன் நடித்தேன். ஆனால், நடன இயக்குனரை என் வாழ்க்கையாக பார்த்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவர் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் நடிகை.
    Next Story
    ×