என் மலர்tooltip icon

    கிசுகிசு

    நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்களாம்.
    நடிகைகள் பலர் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்களாம். அதில் மங்காத்தா விளையாடிய லட்சுமிகரமான நடிகை மட்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். குறிப்பாக மிகவும் சிறிய உடை அணிந்து மற்றும் நிச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

    இவை அனைத்தும் படத்தின் வாய்ப்புக்காக என்று பலரும் பேசி வருகிறார்களாம். நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததாலும், வயதாகி விட்டதாலும், இது போன்று செய்து வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை வீர நாயகி, அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை வீர நாயகி, அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் ஒரு படத்தில் நடனம் ஆட சம்மதித்து இருக்கிறாராம். ஆனால், அவர் ஆடுவது, தமிழ் இல்லையாம், தெலுங்கு படமாம்.

    இந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.75 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறாராம். படக்குழுவினரும் கேட்ட சம்பளத்தை தர சம்மதித்திருக்கிறாராம். நடிகையும் இனிமேல், ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
    தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான அந்த நடிகை தற்போது பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், தமிழ் இயக்குநரின் விருப்பத்தை நிராகரித்துவிட்டாராம். #Gossip
    ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார்.

    பின்னர் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். அங்கும் வாய்ப்புகள் குறைய, பாலிவுட்டுக்கு சென்ற நாயகிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நாயகி பாலிவுட்டில் சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாராம். 

    இந்த நிலையில், தமிழ் இயக்குநர் ஒருவர் நாயகியிடம் கதை சொல்ல அணுகியிருக்கிறாராம். ஆனால் கதையை கேட்கவே தயாராக இல்லாத நாயகி, இயக்குநரின் ஆசையை நிராகரித்துவிட்டாராம். இதையடுத்து இயக்குநர் வேற நாயகியை தேடி வருகிறாராம். 

    இருந்தாலும் நாயகிக்கு இவ்வுளவு இருக்கக் கூடாது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும், தான் நடித்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நின்ற அந்த நாயகி தற்போது படு கவர்ச்சிக்கும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாராம். #Gossip
    மும்பையை சேர்ந்த பூனம் நடிகை, கோழியின் ஆண் இனத்தை குறிக்கும் பெயர் கொண்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், நாயகி அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி, பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனாராம்.

    பின்னர் ஜெயம் நாயகனின் ரோமியோ படத்தில் இரண்டாவது நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்து, பின்னர் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். 



    இதுவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரம் மற்றும் சற்றே கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த நாயகி, தற்போது படுகவர்ச்சிக்கும் தயாராகி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். 

    நல்லாத்தான போயிட்டு இருக்கு. இப்போது தான் படவாய்ப்பு அடுத்தடுத்து வருகிறது. அதை கெடுக்கும் வகையில் நாயகி ஏன் இப்படி முடிவு செய்திருக்கிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip

    போராட்ட பெண்மணி என்று பெயர் பெற்றவர், பெரிய வீட்டில் நுழைந்து பிரபலமானாராம். அதுமட்டுமில்லாமல், அவர் செய்த செய்கைகளால் பலர் கிண்டல் செய்து கலாய்த்தார்களாம்.
    போராட்ட பெண்மணி என்று பெயர் பெற்றவர், பெரிய வீட்டில் நுழைந்து பிரபலமானாராம். அதுமட்டுமில்லாமல், அவர் செய்த செய்கைகளால் பலர் கிண்டல் செய்து கலாய்த்தார்களாம். தற்போது கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம். இவர் கதாநாயகி என்று சொன்னதற்கே நெட்டிசன்கள் கிண்டல் செய்தார்களாம்.

    தற்போது நடிகை அரசியலில் குதிக்க போகிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறாராம். இதைப் பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம். 
    வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறதாம். இதனால் நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
    வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறதாம். இதனால் நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். 

    நடிகைக்கு இந்தப் பட வாய்ப்பு வந்தது குறித்து பல நடிகைகள் அவரை கலாய்த்தார்களாம். ஆனால், நடிகை அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சவாலாக எடுத்து துணிச்சலாக நடித்தாராம். இவரின் இந்த தைரியத்திற்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறதாம்.

    அனால், நடிகைகள் பலரும் தங்கள் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். நில நடிகைகள் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் அவளாம் பெரிய நடிகையா என்று வைத்தெரிச்சலில் புலம்பி தீர்க்கிறார்கள்.

    கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வரும் டேல் நடிகை, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.
    கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வரும் டேல் நடிகை, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்திற்காக நடிகை பேட்டி கொடுக்கும் போது, நடன இயக்குனரை ரொம்ப பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்ய ஆசைபடுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறாராம்.

    இந்த செய்தி பல இடங்களில் தீயாக பரவியதாம். மேலும் நடன இயக்குனருக்கும் இந்த விஷயம் பரவி இருக்கிறது. உடனே நடிகைக்கு போன் செய்து ஏன் இப்படியெல்லாம் சொன்ன என்று கூறி திட்டியிருக்கிறாராம். உடனே நடிகை மறுப்பு தெரிவித்து நான் சொல்லவே இல்லை என்று கூறியிருக்கிறாராம்.

    ரசிகர்கள் பலரும் என்ன இந்த நடிகை இப்படி மாத்தி மாத்தி பேசுகிறாரே, நடிகைக்கு என்ன ஆச்சு என்று பேசி வருகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகி அவரது அடுத்த படம் குறித்து வருத்தத்தில் இருக்கிறாராம். #Gossip
    மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வாரிசு நடிகை, தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம். அந்த நடிகை சமீபத்தில் ஒரு நடிகையின் வாழ்க்கை படத்தில் நடித்தாராம். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். நாயகிக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம்.

    இதனால் செம குஷியில் இருக்கும் அந்த நாயகி, தற்போது ஜோசப் நாயகனுடன் ஒரு படத்திலும், கடவுளின் மறுபெயர் கொண்ட படத்தின் இரண்டாவது பாகத்திலும், கோழி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறாராம். 

    இவ்வாறாக பெரிய நாயகர்களுடன் நடித்து வரும் அந்த நாயகிக்கு ஒரு சிறய வருத்தம் இருக்கிறதாம். நாயகி நடித்து வரும் கோழி படத்தில் மற்றொரு நாயகியும் இருக்கிறாராம். 

    படத்தில் தன்னை விட அந்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் நாயகி வருத்தப்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip
    தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். #Gossip
    பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகா நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறாராம். 

    நாயகி நடிப்பில் இரவு படம் ஒன்றும் விரைவில் ரிலீசாக இருக்கிறதாம். இந்த நிலையில், நாயகிக்கும், மறைந்த திலகம் நடிகரின் முதல் மகனின் பேரனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாம். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லையாம். 

    நாயனும், நாயகியும் சமீப காலமாகவே ஒன்றாக ஊர்சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
    முன்னணி நடிகர் ஒருவர் தனது அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலக இருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்திருக்கிறார்களாம். அவர்களைத் தொடர்ந்து, முன்னணி வாரிசு நடிகர் ஒருவரும் விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம்.

    விராலாயே பல வித்தைகளை செய்யும் அந்த நாயகனை பற்றி சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள் வலம் வருமாம். நாயகன் தற்போது சிவப்பாக இருக்கும் வானம் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தை முடித்த பிறகு, நாயகன் அரசியலில் ஈடுபட இருக்கிறாராம். அடுக்கு மொழி வசனங்களை பேசும் நாயகனின் அப்பா, நாயகனை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். 

    சமீபத்தில் கூட தண்ணீர் பிரச்சனையில் நாயகன் கொடுத்த குரலுக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதனால் மகிழ்ச்சியடைந்த நாயகனின் தந்தை, நாயகனை எப்படியாவது சீக்கிரமாக அரசியலில் இறக்கி திட்டம் போட்டு வருகிறாராம்.



    நாயகனும் தந்தையின் சொல்லுக்கு ஓ.கே. சொல்லிவிட்டாராம். அப்படின்னா நாயகன் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டாரா? என்று சிலர் கேட்க, அது கூடிய சீக்கரமே தெரிய வரும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். நடிகருக்கு இதெல்லாம் செட்டாகாது என்றும் சிலர் கூறுகிறார்களாம். #Gossip

    தமிழ் பட உலகில், ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர், அந்த இரண்டெழுத்து நடிகர்தானாம்.
    தமிழ் பட உலகில், ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர், அந்த இரண்டெழுத்து நடிகர்தானாம். இவர், சத்தமே இல்லாமல், நூறு படங்களில் நடித்து முடித்து இருக்கிறாராம்.

    தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆனதும், இரண்டெழுத்து நகைச்சுவை நடிகரின் ‘கால்ஷீட்’ கேட்டு, ஒரே நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் நெருக்கி வருகிறார்களாம். இதை பயன்படுத்தி இரண்டெழுத்து நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தவில்லை. தயாரிப்பாளர்களின் நலன் கருதி, கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம்! 
    தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர், மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அந்த நாயகனின் வலையில் இளம் நடிகை ஒருவர் சிக்கியிருக்கிறாராம். #Gossip
    மான் படத்தில் நடித்து பிரபலமான தங்கச்சி நடிகை, சமீபத்தில் நடனப் புயல் நடிகருடன் ஒரு படத்தில் நடித்தாராம். பெரிய பிரச்சனைக்கு பின்னர் அந்த படமும் சமீபத்தில் வெளியாகி, திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

    இந்நிலையில், நடிகைக்கும், அந்த படத்தில் நடித்த நடனப் புயல் நாயகனுக்கும் காதல் மலர்ந்துள்ளாம். பேசாத படத்தின் படப்பிடிப்பின் போது பேசியே நாயகியை உஷார் பண்ணிவிட்டாராம் நாயகன். 

    இவர் இளம் நாயகி, நாயகனோ வயது அதிகமானவராச்சே என்று சிலர் கேட்க, காதலுக்கு தான் கண்ணில்லையே என்று சிலர் சொல்கிறார்களாம். ஏற்கனவே அந்த நாயகனின் வலையில் பெரிய நம்பர் நடிகை, கொளு கொளு நடிகை சிக்கி பின்னர் பிரிந்த நிலையில், இப்போது மான் நடிகையா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

    இது எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்றும் சிலர் பீல் பண்றாங்களாம். #Gossip
    ×