சினிமா

ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு ரிலீஸ் - படக்குழு முழு விவரம்

Published On 2019-04-09 12:16 IST   |   Update On 2019-04-09 12:16:00 IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்குகிறது.

போஸ்டரில், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் இடம்பெற்றிருப்பதுடன், போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது மும்பை என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், படம் மும்பை பின்னணியில் உருவாகுவதும், இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதும் உறுதியாகியுள்ளது.



மேலும், நான் நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா, இல்ல கேடு கெட்டவனா இருக்கனுமா என்பதை நீயே முடிவு செய் என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

Tags:    

Similar News