சினிமா செய்திகள்

'விஜய்யின் ஜன நாயகன் விரைவில் வெளியாகும்' - சிவகார்த்திகேயன்!

Published On 2026-01-14 15:11 IST   |   Update On 2026-01-14 15:11:00 IST
  • நாங்கள் என்ன நோக்கத்துடன் படத்தை எடுத்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது
  • . விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன்.

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 'பராசக்தி' படக்குழு கலந்துகொண்டது. இதனைத்தொடர்ந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

"அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரிடமும் நேர்மறை எண்ணங்கள் பரவட்டும். பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் படத்தை சரியான வழியில் புரிந்துகொண்டுள்ளனர். நாங்கள் என்ன நோக்கத்துடன் படத்தை எடுத்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது. அவர்கள் படத்தை முழுமையாகப் பார்த்தால் புரிந்துகொள்வார்கள்.

எனக்கு எந்த பிரச்சார நோக்கமும் இல்லை. அதில் விருப்பமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய ஜனநாயகன் விரைவில் வெளியாகும்" என தெரிவித்தார்.


Tags:    

Similar News