சினிமா

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் படத்தோட பர்ஸ்ட்லுக் வரப்போகுது - விஜய் சேதுபதி

Published On 2018-10-06 17:12 IST   |   Update On 2018-10-06 17:12:00 IST
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்த, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi
தியாகராஜன் குமாரராஜா இயக்கி, தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'.

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். 

`ஆரண்ய காண்டம்' படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #SuperDeluxe #VijaySethupathi

Tags:    

Similar News