சினிமா

சர்கார் படத்தின் இசையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Published On 2018-09-27 17:35 IST   |   Update On 2018-09-27 17:35:00 IST
விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இருந்து சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிம்டாங்காரன் என்ற சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியிருக்கிறது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Sarkar #Vijay 

Tags:    

Similar News