சினிமா

படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் - விஷால் கோரிக்கை

Published On 2018-09-25 05:39 GMT   |   Update On 2018-09-25 05:39 GMT
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். #Sandakozhi2 #Vishal
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகர் விஷால் பேசும் போது,

25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு அக்ஷன் ஹீரோவா கொண்ட வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வது படத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 



கூடியவிரைவில் நான் படம் இயக்குகிறேனோ இல்லையோ, கீர்த்தி சுரேஷ் படம் இயக்குவார். சண்டக்கோழி-2 ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும். 

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். நான் அனைவரையும் சொல்லவில்லை, குறிப்பிட்ட நபர்களுக்கு தான் வேண்டுகோள் வைக்கிறேன். #Sandakozhi2 #Vishal

Tags:    

Similar News