சினிமா செய்திகள்
null

ராமரின் விக்ரகத்தை சிதைத்து விட்டார்கள்.. வெளியானது மோகன் ஜியின் 'திரௌபதி 2' டிரெய்லர்

Published On 2026-01-10 18:29 IST   |   Update On 2026-01-10 18:39:00 IST
  • ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.

இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.

கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. 

இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.  படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இதற்கிடையே, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Full View
Tags:    

Similar News