சினிமா

என் குழந்தைகளுக்கு டான்ஸ் தெரியாது - பிரபுதேவா

Published On 2018-08-25 10:46 GMT   |   Update On 2018-08-25 10:46 GMT
பிரபுதேவா நடிப்பில் லக்‌ஷ்மி படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், அவர் தனது குழந்தைகளுக்கு நடனமாட தெரியாது என்று கூறியிருக்கிறார். #Prabhudeva #Lakshmi
பிரபுதேவா நடிப்பில் லக்‌ஷ்மி படம் இன்று வெளியாகி இருக்கிறது. பிரபுதேவா கூறும்போது, “ இப்போ வர்ற இயக்குனர்கள் கிட்டயும் கதை கேட்கிறேன். பழைய ஆட்கள்கிட்டேயும் கதை கேட்கிறேன். 

‘ஊமை விழிகள்’ படத்துல 20 வயது பையன் இயக்குநர். புதியவர்களையும், முன்பு படம் செய்த இயக்குநர்களையும் பேலன்ஸ் செய்து படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை’ என்றார். உங்கள் வாரிசுகள் நடிக்க வருவார்களா? என்று கேட்டதற்கு, அவங்க சினிமாவுக்குத்தான் வரணும்னு என் மனதில் தோன்றியதில்லை. அவங்களுக்கு டான்ஸ் ரிகர்சல் ரூம்னா என்னென்னு கூடத் தெரியாது. 

என்ன பிடிக்குதோ அதைச் செய்யட்டும். இப்போ நல்ல பசங்கன்னு பேர் வாங்கினா போதும். அதுவே பெரியவங்களா வளர்ந்ததும், ‘அவர் நல்ல ஆளுப்பா’ன்னு பேர் வாங்கினா போதும்’ என்று கூறி இருக்கிறார். #Prabhudeva #Lakshmi

Tags:    

Similar News