சினிமா

கசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை

Published On 2018-08-17 07:38 GMT   |   Update On 2018-08-17 07:38 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் கதை பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தனது ஓட்டுரிமையை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வரும் விமானம் தாமதமாவதால், அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி ஆட்கள் போட்டு விடுகிறார்கள்.

அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதிக்கிறார் விஜய். அரசியலில் புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். இந்த கதை கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய டிரீட் காத்திருக்கிறது எனலாம். 



சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay

Tags:    

Similar News