சினிமா

ரொம்ப யோசிக்காதீங்க, இது தான் சாமி ஸ்கொயர் கதை - மேடையில் போட்டுடைத்த ஹரி

Published On 2018-07-24 07:24 GMT   |   Update On 2018-07-24 07:24 GMT
சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, சாமி ஸ்கொயர் படத்தின் கதையை மேடையிலேயே போட்டுடைத்தார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும் போது,

மீண்டும் மீண்டும் எனக்கு தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 



சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். #SaamySquare #Vikram

Tags:    

Similar News