சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி

Published On 2026-01-15 02:28 IST   |   Update On 2026-01-15 02:28:00 IST
  • நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
  • ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் பாலய்யா நடிக்கிறார்.

சென்னை:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. 'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், 2026, ஜூன் மாதம் 12-ம் தேதி 'ஜெயிலர் 2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர்.

அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது

இதற்கிடையே, 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.

கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.

Tags:    

Similar News