கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்தும் போக்ஸ்வேகன்

Published On 2022-09-23 09:06 GMT   |   Update On 2022-09-23 09:06 GMT
  • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
  • போக்ஸ்வேகன் கார்களின் விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்கள் விலை 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் சந்தை பங்குகளை அதிகப்படுத்தியதில் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. எனினும், தற்போதைய விலை உயர்வு போக்ஸ்வேகன் வாகன விற்பனையை அதிகப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்கள் அந்நிறுவனத்தின் இந்தியா 2.0 வியாபார யுக்தியின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் MQB-AO IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செடான் பிரிவில் பெரிய மாடலாக விர்டுஸ் உருவாகி இருக்கிறது. இத்துடன் சிறப்பான வீல்பேஸ் கிடைத்துள்ளது.

டைகுன் மாடல் அளவீடுகளை பொருத்தவரை 4221 மில்லிமீட்டர் நீளம், 1760 மில்லிமீட்டர் அகலம், 1612 மில்லிமீட்டர் உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 மில்லிமீட்டர் ஆகும். அம்சங்களை பொருத்தவரை டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களில் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ வைப்பர் மற்றும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. 

Tags:    

Similar News