கார்

இப்போலாம் ரூ. 10 லட்சம் விலையில் யாரும் கார் வாங்குறதில்ல.. மாருதி சுசுகி தலைவர் வருத்தம்

Published On 2024-10-30 13:11 IST   |   Update On 2024-10-30 13:11:00 IST
  • இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
  • டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை.

இந்திய சந்தையில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் கார் மாடல்கள் விற்பனை சரிந்து வருவது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கவலை தெரிவித்துள்ளார். நிலையற்ற எரிபொருள் விலை, என்ட்ரி லெவல் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர் போன்ற கார்களின் விற்பனை குறைந்து வருகிறது.

ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களுக்கான சந்தை வளர்ச்சி பெறவேயில்லை. தொடர்ச்சியாக இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்.சி. பார்கவா இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சார்ந்த கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார். இரண்டாவது காலாண்டில் மட்டும் மாருதி சுசுகியின் லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 


என்ட்ரி லெவல் பிரிவு வளர்ச்சியை சந்திக்காத வரை, டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில், உள்நாட்டில் மினி கார்களின் விற்பனை 15.5 சதவீதம் சரிவடைந்து 66 ஆயிரம் யூனிட்களாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இதே காலக்கட்டத்தில் 78 ஆயிரத்து 170 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 சதவீத விற்பனையை ரெனால்ட் க்விட் மாடல் பிடித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 81 ஆயிரத்து 143 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News