ஆன்மிக களஞ்சியம்

"ஓம் நமோ நாராயணாய நம" என்று சொல்லுங்கள்

Published On 2023-09-21 11:53 GMT   |   Update On 2023-09-21 11:53 GMT
  • கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.
  • திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.

இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.

அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு.

திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம்.

கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும்.

கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு.

ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

Tags:    

Similar News