ஆன்மிக களஞ்சியம்

கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்!

Published On 2023-08-23 12:57 GMT   |   Update On 2023-08-23 12:57 GMT
  • ஆதிபைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர்.
  • பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்!

ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக,

ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன.

பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.

மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.

பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.

பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன.

அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.'

Tags:    

Similar News