என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.

    இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐபோன் 15 சீரிஸ் அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர பல்வேறு இதர சாதாகனங்கள் மற்றும் ஆப்பிள் சேவைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    ஐபோன் 15 சீரிசில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் தோற்றம் கிட்டத்தட்ட அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    • விவோ V29e ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் விவோ V29e விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய விவோ V29e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட வளைந்த AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆர்டிஸ்டிக் டிசைன் கொண்டிருக்கும் விவோ V29e ஸ்மார்ட்போனின் பின்புறம் டைமன்ட் கட் க்ரிஸ்டல் மற்றும் ஷிம்மரிங் டெக்ஸ்ச்சர் உள்ளது. இவை ஸ்மார்ட்போனிற்கு ஆடம்பர தோற்றத்தை வழங்குகிறது. இதன் ஆர்டிஸ்டிக் ரெட் நிற வேரியண்ட் நிறம் மாறும் கிளாஸ் கொண்டிருக்கிறது. இது யு.வி. அல்லது சூரிய வெளிச்சம் படும் போது ரெட்-இல் இருந்து பிளாக் நிறத்திற்கு மாறிவிடும்.

     

    விவோ V29e அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 13

    64MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP AF செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விவோ V29e ஸ்மார்ட்போன் ஆர்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்டிஸ்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் செப்டம்பர் 7-ம் தேதி துவங்குகிறது.

    • ரியல்மி GT 5 மாடலில் வைபை 7 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.
    • ரியல்மி GT 5 மாடலில் அதிகபட்சம் 24 ஜி.பி. வரையிலான LPDDR5x ரக ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் GT 5 ஸ்மார்ட்போன் நாளை (ஆகஸ்ட் 28) சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் ரியல்மி நிறுவனம் புதிய GT 5 ஸ்மார்ட்போனிற்கான அம்சங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலில் வழங்கப்படும் அம்சகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் ரியல்மி GT 5 ஸ்மார்ட்போன் சோனி IMX890 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் 2MP மேக்ரோ கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. கேமரா தவிர புதிய ரியல்மி GT 5 மாடலில் வைபை 7 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

     

    புதிய ரியல்மி GT 5 மாடலில் மேம்பட்ட டிரிபில்-ஃபிரீக்வனசி ஜி.பி.எஸ். பொசிஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது மூன்று ஜி.பி.எஸ். ஃபிரீக்வனசிக்கள்- L1, L2 மற்றும் L5 உள்ளிட்டவைகளை நான்கு-ஃபிரீக்வன்சி பெய்டௌவுடன் ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் நேவிகேஷன் அதிக துல்லியமாக இருக்கும்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5 மாடலில் 6.7 இன்ச் OLED FHD+ 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 24 ஜி.பி. வரை LPDDR5x ரேம், 1 டி.பி. வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 வழங்கப்படும் என்று தெரிகிறது.

    பேட்டரி மற்றும் சார்ஜிங் அடிப்படையில், ரியல்மி GT 5 ஸ்மார்ட்போன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் மாடல்கள் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    அதன்படி ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது. டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் TENAA வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.

     

    ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல்கள் TENAA வலைதளத்தில் 2312DRA50C எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 1 டி.பி. வரையிலான மெமரி, 18 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 16 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    TENAA வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன்கள் நான்குவித ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இவற்றில் 200MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல்களில் முறையே 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 4880 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    • இதே போன்ற வசதி ரியல்மி C55 மற்றும் ரியல்மி C33 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.
    • ரியல்மி C51 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி C51 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய C சீரிஸ் மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர்களில் சாம்பியன் வருகிறது (Champion is coming) என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட சிறப்பானதாக இருக்கும் என்று ரியல்மி தெரிவித்து உள்ளது.

    டீசர்களின் படி ரியல்மி C51 ஸ்மார்ட்போன் நாட்ச் மற்று்ம மினி கேப்சியுல் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இதே போன்ற வசதி ரியல்மி C55 மற்றும் ரியல்மி C33 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் ரியல்மி C51 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    தாய்வான் மட்டுமின்றி இந்தோனேசியா, கம்போடியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நடைபெற்று வருகிறது. ரியல்மி C51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ 90Hz LCD ஸ்கிரீன், 5MP பிரைமரி கேமரா, யுனிசாக் T612 பிராசஸர், 4 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி C51 மாடல் மின்ட் கிரீன் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    விற்பனை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத துவக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். இது பற்றிய சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம். 

    • மோட்டோரோலா நிறுவனத்தின் G84 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.
    • மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இது பற்றிய தகவல் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசரில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

     

    அதன்படி மோட்டோ G84 5ஜி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் oPOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G82 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

     

    இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ, மார்ஷ்மல்லோ புளூ மற்றும் விவா மஜெண்டா என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • ரியல்மி 11 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 வழங்கப்படுகிறது.
    • ரியல்மி 11 5ஜி மாடலில் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11x 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.72 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. வரையிலான ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 11 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா, 11x 5ஜி மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் 2MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி 11 5ஜி மாடலில் குளோரி ஹாலோ டிசைன், கேமரா மாட்யுலை சுற்றி கோல்டன் ரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 11 5ஜி மாடலில் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. ரியல்மி 11x 5ஜி மாடலில் 33 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    ரியல்மி 11x 5ஜி மற்றும் ரியல்மி 11 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz டைனமிக் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    Arm மாலி-G57 MC2 GPU

    ரியல்மி 11x 5ஜி- 6 ஜிபி/ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    ரியல்மி 11 5ஜி - 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்டாராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0

    ரியல்மி 11 5ஜி - 108MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    ரியல்மி 11x 5ஜி - 64MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    ரியல்மி 11 5ஜி - 16MP செல்ஃபி கேமரா

    ரியல்மி 11x 5ஜி - 8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி 11 5ஜி - 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 11x 5ஜி - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரம்:

    ரியல்மி 11 5ஜி மாடல் குளோரி பிளாக் மற்றும் குளோரி கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி 11x 5ஜி மாடல் பர்பில் டான் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டம்.
    • கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மாடல்களின் குறைந்த விலை எடிஷன் உருவாகி வருவதாக தகவல்.

    சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய மற்றும் ஃப்ளிப் போன் மாடல்கள்- கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த மாடல்கள் ஃபேன் எடிஷன் (FE) பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் FE எடிஷன் மாடலை விற்பனை செய்து வருகிறது. இதே போன்று தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z FE மாடலை அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

     

    புதிய தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவன மடிக்கக்கூடிய மற்றும் ஃப்ளிப் ரகத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், இந்த குறைந்த விலை மாடல்கள் அடுத்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6 அல்லது கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களை தொடர்ந்தே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த தகவலை வழங்கி இருக்கும் டிப்ஸ்டர் கேலக்ஸி S23 FE மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இறுக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஏற்கனவே கேலக்ஸி S23 FE பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

    • புதிய ரியல்மி GT5 மாடல் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 1 டி.பி. மெமரி கொண்டிருக்கும்.
    • ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் ரியல்மி தனது ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது. அதன்படி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற இருக்கும் ரியல்மி 5-ம் ஆண்டு விழாவில் புதிய ரியல்மி GT5 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டுமின்றி ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி அந்நிறுவன வளர்ச்சி பற்றியும் தெரிவித்து இருக்கிறார். ஐந்து ஆண்டுகளில் ரியல்மி நிறுவனம் வெற்றி மீது வெற்றி பெற்று வருவதாகவும், 21 நாடுகளில் தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருவதாகவும், தற்போது உலகின் முதல் பத்து ஸ்மார்ட்போன் பிரான்டுகளில் ஒன்றாக ரியல்மி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

     

    இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மொபைல் பிரான்டாக ரியல்மி இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மியின் டேர்-டு-லீப் குறிக்கோளை வைத்துக் கொண்டு லீப்-ஃபார்வேர்டு மற்றும் ஐந்தாவது ஆண்டு விழாவுக்கான லீப்-அப் திட்டங்கள் மீது கவனம் செலுத்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    புதிய ஸ்மார்ட்போனை பொருத்தவரை, இந்த மாடல் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ரியல்மி GT5 மாடலில் 1.5K ஃபிளாட் AMOLED 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம், 240 வாட் மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • விவோ V29e ஒட்டுமொத்த தோற்றம் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது.
    • விவோ V29e ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    விவோ இந்தியா நிறுவனம் தனது புதிய V29e ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய விவோ V29e மாடலுக்கான டீசர்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறது. இத்துடன் மைக்ரோசைட் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் டிசைன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    தற்போதைய அறிவிப்பின் படி விவோ V29e மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக நிகழ்வு சமூக வலைதளங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து விவோ V29e விற்பனை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ரிடெயில் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

    விவோ V29e ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 3D வளைந்த டிஸ்ப்ளே, டூயல் டோன் ரியர் டிசைன், நிறம் மாறும் தீம் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V29e ஒட்டுமொத்த தோற்றம் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் விவோ V29 சீரிசில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மாடல் ஆகும்.

    புதிய விவோ V29e மாடலை தொடர்ந்து, விவோ V29 மற்றும் V29 ப்ரோ மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய டீசர்களின் படி விவோ V29e மாடலில் 64MP பிரைமரி கேமரா, OIS, 50MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த விவரங்கள் தவிர விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவல்களையும் சூசகமாக தெரிவித்துள்ளது.

    அதன்படி விவோ V29e மாடலில் மெல்லிய 3D வளைந்த ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் விவோ V29e விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல்.
    • இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய GT 5 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், வரும் நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரியல்மி சீனா தலைவர் சு கி சேஸ், ரியல்மி GT 5 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

    அவரது வெய்போ பதிவில் இது குறித்த பதிவில், "30-க்கும் அதிக இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 பிளாக்ஷிப் மாடல்களை வெவ்வேறு பிரான்டுகள் பயன்படுத்தி விட்டன. ஆனால் இவை எதுவும் உச்சக்கட்ட செயல்திறனை வழங்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

     

    இந்த பதிவின் மூலம் புதிய GT 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதே பிராசஸர் தற்போது ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது LPDDR5x ரேம், UFS 4.0 ஸ்டோரேஜ் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரியல்மி GT 5 மாடல் நுபியா ரெட்மேஜிக் 8S ப்ரோ பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடல்கள் வரிசையில், 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இணையும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி GT 5 மாடலில் 6.74 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP மூன்றாவது சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 240 வாட் சார்ஜிங், 5200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • மோட்டோ e13 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • மோட்டோ e13 மாடல் மூன்று வித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ e13 ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக மோட்டோ e13 மாடல் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்ற புதிய வேரியன்டில் கிடைக்கிறது. அந்த வகையில், இத்தகைய மெமரியுடன் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மாரட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெற்று இருக்கிறது.

     

    மோட்டோ e13 அம்சங்கள்:

    6.5 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்)

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ e13 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் கிரீமி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 16-ம் தேதி துவங்குகிறது.

    ×