என் மலர்
மொபைல்ஸ்
சாம்சங் நிறுவனம் அசத்தலான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி போன்றே காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்பஓனிற்கானகாப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவும், பெரிய கவர் டிஸ்ப்ளே, அதிக கேமராக்கள் மற்றும் சிறப்பான ஹின்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பத்தை சாம்சங் நிறுவனம் ஜூன் 2020 வாக்கில் சமர்பித்து இருக்கிறது. இது மடிக்கக்கூடிய எலெக்டிரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஹின்ஜ் பிளெக்ஸ் மோட் வசதி மட்டுமின்றி ஜீரோ-கேப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை மூன்று பிரைமரி கேமரா மாட்யூல், எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும் உள்புற டிஸ்ப்ளே பன்ச் ஹோல் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் கவர் ஸ்கிரீன், 7.6 இன்ச் ஸ்கிரீனுடன் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரவுசர் பென்ச்மார்க் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 ஜி என்றே அழைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிடப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு சாப்ட்வேர் அப்டேட் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பெரும்பாலான ரெட்மி மற்றும் எம்ஐ சாதனங்களுக்கு எம்ஐயுஐ 12 அப்டேட் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.
தற்சமயம் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை சியோமி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் கொரோனாவைரஸ் ஊரடங்கு அறிவிக்கும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் வரை முதன்மையான நோட் சீரிஸ் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது.
ரெட்மி நோட் 9 ப்ரோ தவிர எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இது சியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரெட்மி இந்தியா சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் பவர் பேக்டு மாடலாக இருக்கும் என சியோமி குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

ரெட்மி இந்தியா பதிவுகளின் படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹைரெஸ் ஆடியோ மற்றும் நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் வழியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது. பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவன வலைதளத்தில் இருந்து லீக் ஆன விவரங்களில் இந்த தகவல் இடம்பெற்று இருந்ததாக தெரிகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்களுடன் சார்ஜரை வழங்கவில்லை. இவ்வாறு செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. ஐபோன் 7 சீரிஸ் துவங்கி ஹெட்போன் ஜாக்-ஐ ஆப்பிள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இந்த ஆண்டு சார்ஜர் இணைந்து கொண்டது. தற்சமயம் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரை வழங்காது என கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காத பட்சத்தில் சாம்சங் என்ன காரணத்தை தெரிவிக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மாடல்களில் FHD+ ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இவை பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது கேலக்ஸி எப்62 என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் கிளாஸி பினிஷ், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பாலிகார்பனைட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை சாம்சங் கிளாஸ்டிக் என அழைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என்றும் டிஸ்ப்ளேவினுள் அல்லது பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் டூயல் சிம் கார்டு வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் எக்சைனோஸ் 9825 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் நொய்டாவில் உள்ள ஆலையில் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலெக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு ஆப்லைன் சந்தையில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நாடு முழுக்க ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனம் வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அறிமுகமான போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த பன்டச் ஒஎஸ்11 இயங்குதளம் கொண்டிருந்தது. தற்சமயம் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ஏஜி மேட் கிளாஸ் கொண்ட ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட்வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டில் மொத்தம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை கேலக்ஸி இசட் ப்ளிப் 2, கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் போல்டு லைட் மாடல்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் முதல் முறையாக அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே நாட்ச் 7.6 இன்ச்களில் இருந்து 7 இன்ச் ஆக குறைக்கப்பட்டு இரண்டாவது டிஸ்ப்ளே 4 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி இசட் ப்ளிப் 2 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே, 3 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இதுபோன்ற டிஸ்ப்ளே வழங்கப்படாது என்றே தெரிகிறது.
கேலக்ஸி இசட் போல்டு லைட் ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலில் உள்ள டிஸ்ப்ளே அம்சங்களுடன், சற்றே குறைந்த ஹார்டுவேர் மற்றும் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று அன்டர் டிஸ்ப்ளே கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
குவாட் கேமரா சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெக்னோ பூவா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4ஜிபி + 64ஜிபி விலை ரூ. 9,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், நோட்டிபிகேஷன், குவிக் பேனல் உள்ளிட்டவை முன்பை விட மேம்படுத்தப்பட்டு தெளிவாக விவரங்களை வழங்குகிறது.

அனிமேஷன் மற்றும் மோஷன் எபெக்ட்கள் மென்மையாக்கப்பட்டு, லாக் ஸ்கிரீன் பேட் அவுட் சுத்தமாக இருக்கிறது. இத்துடன் டாகிள் செய்வது அதிகளவு நேர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது.
சாம்சங்கின் ஒன்யுஐ 3 அப்டேட் இன்று முதல் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் கேலக்ஸி எஸ்20 சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. சில வாரங்களில் இந்த அப்டேட் மேலும் சில சந்தைகள் மற்றும் கேலக்ஸி நோட் 20, இசட் போல்டு 2, இசட் ப்ளிப், நோட் 10, போல்டு மற்றும் எஸ்10 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படலாம்.






