search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு திருவிழா"

    • குடிநீர், கழிப்பிடம், உணவுக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன.
    • வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அறை எண், நிறுவனத்தின் பெயர் அமைக்கப்படுகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா நாளை 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    முகாமுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    550 தலைசிறந்த சிறு, குறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் 61,255 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. முகாம் நடைபெறும் இடத்தில் வேலைதேடுபவர்கள் தங்கு தடையின்றி தனியார் நிறுவனங்களை சந்திக்கும் வகையில் விசாலமான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்த பின் வழங்கப்படும் அடையாள அட்டையை கொண்டு வேலைதேடுபவர்கள், நிறுவனங்களை சந்திக்கலாம். வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அறை எண், நிறுவனத்தின் பெயர் அமைக்கப்படுகிறது.

    மகளிர் திட்டம் சார்பில் 650 பேர், காவல்துறை சார்பில் 300 பேர், போக்குவரத்து காவல்துறை சார்பில் 50 பேர், சுகாதாரத்துறை சார்பில் 30 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்கிறார்கள். கோவை, நீலகிரி, சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள் 70 பேர், 12 தீயணைப்புத்துறை அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், 500 மாநகராட்சியை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்ற உள்ளனர்.

    தேவையான குடிநீர், கழிப்பிடம், உணவுக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன. முகாமுக்கு வேலை தேடி வருபவர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்களின் தகவல் கையேடு வழங்கப்படும். வேலைவாய்ப்பு திருவிழாவில் இளைஞர்கள் பங்கேற்று சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்கமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது
    • 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா வருகிற 11-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேரை பங்கேற்க செய்யும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு திருவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விழா நடக்கும் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

    • மாநகராட்சி, வேலை வாய்ப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • முகாம் குறித்து பொதுமக்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி, வேலை வாய்ப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பங்கேற்க பதிவு செய்துள்ள நிறுவனங்கள், விண்ணப்பதாரர்கள், வேலை வாய்ப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முகாமில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். முகாம் நடைபெறும் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், துறை வாரியாக ஊழியர்கள் பங்களிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முகாம் குறித்து பொதுமக்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- திருப்பூர் பகுதியில் குறை கேட்பு கூட்டத்தின் போது பல தரப்பினரும் வீடு, மனைப்பட்டா, வேலை வாய்ப்பு என கேட்டு மனு அளிக்கின்றனர். ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வேலை கேட்டு வந்துள்ளது.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வேலை வாய்ப்பு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. இந்நிறுவனங்கள் 26 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இன்னும் கூடுதலான நிறுவனங்கள் பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நேற்று வரை 4,500 பேர் வரை முகாமில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு லட்சம் பேருக்கு மேல் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த முகாம் மாநில அளவில் சாதனை படைக்கும் விதமாக அமைய வேண்டும்.

    ேவலை தரும் நிறுவனங்களும், வேலை தேடி வருவோரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொண்டு பயன் பெறும் விதமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேலை வாய்ப்புக்கு வருவோர் தங்கள் திறனை வளர்த்து கொள்ளும் விதமாக இம்முகாமில் பயிற்சி அரங்கும் அமைத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலைவாய்ப்பு திருவிழாவில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 800க்கும் மேற்பட்ட 34 துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளன.திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு தேடுவோரும் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வகையில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த முகாம் குறித்த விளம்பர போஸ்டர் மற்றும் அறிக்கைகள் காட்சிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இது குறித்து அறிவிக்கும் வகையில் அனைத்து வார்டிலும் வாகன பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நிறுவனங்களுக்கான அரங்குகள் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை பார்வையிட்டனர். அரங்குகள் அமைவிடம், விண்ணப்பதாரர் வந்து செல்லும் வழி, வாகன பார்க்கிங், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியன குறித்தும் உரிய ஏற்பாடுகள் செய்வது குறித்து அறிவுறுத்தினர்.

    • சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
    • வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்கள், உரிய கல்விச்சான்றுகள், புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் திருவிழாவில் பங்கேற்கலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாநகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்கள், உரிய கல்விச்சான்றுகள், புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் திருவிழாவில் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய https://tirupurjobfair.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டம், ஆசிரியர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள், காவலாளி என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அனு–மதி இலவசம்.

    வேலைவாய்ப்பு திருவிழா குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மகளிர் திட்டத்தை சேர்ந்த வட்டார மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசும்–போது, 34 துறைகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். தற்போது வரை 25 ஆயிரத்து 300 பேருக்கு வேலை–வாய்ப்பு வழங்க தயாராக உள்ளது. படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. 1 லட்சம் பேர் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உள்ளிட்டவரகள் கலந்துகொண்டனர்.

    • தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.
    • 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது.இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது :- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுகுமாா், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×