search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் வேலைவாய்ப்பு திருவிழா குறித்து ஆலோசனை
    X

    கோப்புபடம்.

    தனியார் வேலைவாய்ப்பு திருவிழா குறித்து ஆலோசனை

    • தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.
    • 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது.இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது :- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுகுமாா், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×