search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் கவிழ்ந்து விபத்து"

    • நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    முத்தூர் : 

    திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால் மேடு பகுதி அருகே வந்த போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் பதறியபடி கூச்சலிட்டு விழுந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து சாலையில் காயங்களுடன் கிடந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேனில் பயணம் செய்த 11 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்களின் சத்தத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • வேன் பின்பக்க டயர் வெடித்து நடு ரோட்டில் கவிழ்ந்து.
    • விபத்தில் டிரைவர் உட்பட 12 பேருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து சிவியர்பாளையம் பகுதியில் இருந்து திருமணத்தி ற்காக பெண் வீட்டார் புளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு நிச்சயம் செய்து மதிய விருந்துக்காக வாடகை வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புங்கம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தும் மற்றும் வீல் ட்ரம் உடைந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் இழுத்து சென்று நடு ரோட்டில் கவிழ்ந்து.

    இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது. சிலருக்கு கை, கால் முறிவு, தலையில் காயம் ஏற்பட்டிரு ந்தது.

    இந்நிலையில் விபத்தில் வேனில் சிக்கி கொண்ட வர்களை அருகில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயம் அடைந்த 5 நபர்களை மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும் மற்றும் 2 நபர்களை மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
    • அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

     பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் போயர்தெரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை வேனில் ஏற்றி கொண்டு முதுகம்பட்டி பகுதியை நோக்கி சென்று கொண்டி ருந்தது. அப்போது ஜம்போடு பகுதி வளைவில் ஓட்டு னரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத வித மாக பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
    • வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உகாயனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளி முடிந்ததும்,சுமார் 20 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களோடு தனியார் வாடகை வேன் பொங்கலூர் - மாதப்பூர் ரோட்டில் வந்துள்ளது.

    மாதப்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது மேடான பகுதியில் ஓட்டுனர் வேனை திருப்ப முயன்ற போது, நிலை தடுமாறி அங்குள்ள பள்ளமான இடத்தில் எதிர்பாராத விதமாக வேன் சாய்ந்த நிலையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேனில் சிக்கியிருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தை மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேன் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • டிரைவர் ரமேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரிலிருந்து புட்டி ரெட்டிபட்டி செல்லும் ரோட்டில் வே.புதூர் அருகே சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனை ஓட்டி வந்த முத்தனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.a

    அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்றில் பழுது பார்க்க பொருட்களை ஏற்றி சென்ற போது வாகனம் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த புளியமரத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×