search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீர் சக்ரா விருது"

    கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது.

    வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி

    இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

    இந்த விழாவில், சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பழனி சார்பில் அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல், சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

    இதையும் படியுங்கள்.. மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

    ×