search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள் தேர்வு"

    • வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
    • 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    மாநில அளவில் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜய சுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் நெடுஞ்செழியன், அமீர்ஜான், நடராஜன், அப்துல்லா, தயாளன், தமிழ்வாணன், முகமது கனி, பொன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதாவது 1.1.2010 -ந்தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி க்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சரிபார்க்க ப்பட்டதும் வீரர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். இதில் ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    நிகழ்ச்சியில் கடலூர் அசோசியேசன் பொருளாளர் பாலமுரளி, இணைச் செயலாளர் சகாய செல்வம், விளையாட்டு பயிற்சியாளர்கள் மோகனசந்திரன், வினோ த்குமார், செங்குட்டுவன், முத்துராமன், மணிகண்டன், பாலமுருகன், பிரபு, பாலாஜி, விவேக், பழனி, மணிவாசகம், இளவரசன், சிவரஞ்சனி, யுவஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • 8 மாவட்டங்களில் போட்டி நடக்கிறது
    • திருப்பத்தூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டத்துக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டி, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நடக்கிறது, இதில் திருப்பத்தூர் மாவட்டம் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி சிவகங்கையில் நடக்கிறது.

    இதில் திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ளும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் விவரம்:- ஜி.முகமது வசிஃப் (கேப்டன்) பி.ஆதிகேசவன், கே.ராகேஷ், கே.சந்தீப், எல்.கோகுல், எம்.அசோக் குமார், என்.ஜவாத் அகமது, பி.ஆகாஷ், பி.ஏனோக் ரெஹோபோத், பி.கிளாட்சன் ஜீவராஜன், எஸ்.ஆலன் பெலிக்ஸ், எஸ்.நிரஞ்சன், எஸ்.சுகுமார், எஸ்.சையத்கயாஸ்கபீர், அஷு, இந்த கிரிக்கெட் அணியுடன் மேலாளர் எஸ்.ஜெகன் மற்றும் பயிற்சியாளர் ஆர்.தினேஷ் குமார் உடன் செல்கின்றனர்,

    இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஏ.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் கே.ஜெய்சந்திரன் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் பிரிந்து முதல் முறையாக 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் தேர்வு பழங்கரை, அணைப்புதூர் டீ பப்ளிக் பள்ளியில், வருகிற 25-ந் தேதி நடக்கிறது.இப்போட்டியில் 2003 செப்டம்பர் 1 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். தங்கள் பெயர், போட்டோ, பிறப்பு மற்றும் முகவரி சான்றிதழ்களுடன் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அதன்படி 19ல் துவங்கிய பதிவு இன்று மாலை 5மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் வெள்ளை நிற உடை அணிந்து வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு துறை சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யபட்டனர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், நிலைய அலுவலர் விஜயகுமார், மற்றும் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×