திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு 25-ந்தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் தேர்வு பழங்கரை, அணைப்புதூர் டீ பப்ளிக் பள்ளியில், வருகிற 25-ந் தேதி நடக்கிறது.இப்போட்டியில் 2003 செப்டம்பர் 1 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். தங்கள் பெயர், போட்டோ, பிறப்பு மற்றும் முகவரி சான்றிதழ்களுடன் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன்படி 19ல் துவங்கிய பதிவு இன்று மாலை 5மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் வெள்ளை நிற உடை அணிந்து வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com