19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

8 மாவட்டங்களில் போட்டி நடக்கிறதுதிருப்பத்தூர் மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்
தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்.
தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்.
Published on

திருப்பத்தூர்:

தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டத்துக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டி, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நடக்கிறது, இதில் திருப்பத்தூர் மாவட்டம் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி சிவகங்கையில் நடக்கிறது.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ளும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் விவரம்:- ஜி.முகமது வசிஃப் (கேப்டன்) பி.ஆதிகேசவன், கே.ராகேஷ், கே.சந்தீப், எல்.கோகுல், எம்.அசோக் குமார், என்.ஜவாத் அகமது, பி.ஆகாஷ், பி.ஏனோக் ரெஹோபோத், பி.கிளாட்சன் ஜீவராஜன், எஸ்.ஆலன் பெலிக்ஸ், எஸ்.நிரஞ்சன், எஸ்.சுகுமார், எஸ்.சையத்கயாஸ்கபீர், அஷு, இந்த கிரிக்கெட் அணியுடன் மேலாளர் எஸ்.ஜெகன் மற்றும் பயிற்சியாளர் ஆர்.தினேஷ் குமார் உடன் செல்கின்றனர்,

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஏ.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் கே.ஜெய்சந்திரன் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பிரிந்து முதல் முறையாக 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com