search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை கடும் சரிவு"

    • புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
    • புரட்டாசி மாதம் என்பதால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்கிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் திண்டுக்கல்லுக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதும் புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

    வழக்கமாக புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் மீன்கள் விலையும் பாதியாக குறைந்துள்ளது. ரூ.400-க்கு விற்ற நகரமீன்கள் ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதேபோல் விளாமீன் ரூ.250-க்கும், ரூ.1000-க்கு விற்ற வஞ்சரம் ரூ.600-க்கும் விற்பனையானது. இறால் ரூ.450, புளூ நண்டு ரூ.450 என்ற விலையில் விற்பனையானது. மீன்கள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    • கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.
    • விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது.

    திண்டுக்கல்:

    நீர்ப்பூசணி என அழைக்கப்படும் வெள்ளை பூசணி சமையலுக்கும், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரங்களுக்காகவும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளதால் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பூசணிக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

    கொடி இனத்தை சேர்ந்த பூசணிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள 2 வகை பூசணி காணப்படு கிறது. இந்த 2 வகை பூசணிக்காய்களிலும் உள்ள சதைப்பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படு த்தப்படுகின்றன.

    வெள்ளைப் பூசணி க்காயை பெரும்பாலும் திருஷ்டி கழிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டா சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்ச த்தும் வளமாக நிறைந்து ள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

    இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட வெள்ளை பூசணிக்காய்களை சாகுபடி செய்ய திண்டுக்கல் சுற்று வட்டார பகுதியான தாடிக்கொம்பு, பழைய காப்பிளியபட்டி, வி.புதூர், மறவபட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையால் விளை ச்சல் அமோகமாக உள்ளது.

    திண்டுக்கல் அடுத்த பழைய காப்பளிய ப்பட்டியில் இருந்து விளை விக்கப்பட்ட வெள்ளை பூசணி ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். கடந்த மாதங்க ளில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருந்ததால் ரூ. 15க்கு விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் உள்ளதால் வரத்து அதிகரி த்தது. மேலும் வெள்ளை பூசணியின் பயன்பாடு குறைவாக உள்ளதால் இன்று ரூ.8 க்கு விலை போனது. இது விவசாயிக ளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பழைய காப்பிளியப் பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரபு கூறுகையில்,

    1½ ஏக்கரில் பூசணி பயிரிட்டிருந்தேன். ரூ.40 ஆயிரம் செலவான நிலை யில் 5 டன் பூசணிக்காய் விளைச்சல் வந்தது. ஆனால் விசேஷ தினங்களோ, கோவில் திருவிழாக்கலோ அதிகம் இல்லாத நிலையில் ரூ.8 க்கு விலை போனது பெரும் கவலை அளிக்கிறது. குறைந்த பட்சம் ரூ.12 விலை போனால் மட்டுமே விவசாயிக்கு கட்டுபடியான விலை கிடைக்கும். இந்த விலை சரிவு விவசாயி களுக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.


    இந்த வாரம் ஒரு முட்டைக்கு 5 ஆயிரம் விலை குறைந்தது.

    கடத்தூர்,

    குறைந்த பட்சம் 1 மூட்டை 6 ஆயிரம் முதல் அதிக அளவாக 10 ஆயிரம்வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் வெற்றிலை மார்கெட்டில் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றது.

    கடந்த வாரம் 128 கட்டுகள் கொண்ட 1 மூட்டை 15 ஆயிரம்வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஒரு முட்டைக்கு 5 ஆயிரம் விலை குறைந்தது.

    குறைந்த பட்சம் 1 மூட்டை 6 ஆயிரம் முதல் அதிக அளவாக 10 ஆயிரம்வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் மூட்டைக்கு 5 ஆயிரம் விலை குறைந்ததால் வெற்றிலை விவசாயிகள் பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

    • தருமபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது தற்பொழுது கோடை வெயிலின் தாக்கத்தால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
    • செண்டு மல்லி கிலோ ரூ.20 என விற்பனை செய்யப்ட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு கிராம பகுதிகளில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் பூக்கள் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெப்பம் 100 டிகிரிக்கு மேலாக வாட்டி வதைப்பதால் பூக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு பூக்கள் விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்பொழுது குண்டுமல்லி சீசன் தொடங்கியுள்ளது. வாசனை திரவங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு இன்னும் குண்டு மல்லி கொள்முதல் செய்யப்படா ததால் படு வீழ்ச்சியில் குண்டுமல்லி கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து தருமபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது தற்பொழுது கோடை வெயிலின் தாக்கத்தால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது . பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் படுவீழ்ச்சியில் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர். தருமபுரி பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.220 பன்னீர் ரோஸ் ரூ.40 ரூபாய், சம்பங்கி ரூ.30, கோழி கொண்டை ரூ.40, அரளி ரூ.80 , செண்டு மல்லி கிலோ ரூ.20 என விற்பனை செய்யப்ட்டு வருகிறது.

    • வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.
    • முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. முள்ளங்கி விளைச்சல் நிலங்களுக்கு வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.

    இதனை அறிந்த பென்டரஹள்ளி கிராமத்தில் உள்ள திப்பனாங்குட்டை ஏரியின் மீன் பிடி குத்தகைதாரர், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை அணுகி முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.

    விவசாய நிலத்தில் வீணாக போகும் முள்ளங்கிகளை வேறு வழியின்றி கிலோ ஒரு ரூபாய்க்கு விவசாயிகள் கொடுத்துவிடுகின்றனர்.

    • தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.
    • சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

    தருமபுரி,

    சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் விளைச்சல் பாதித்தது. இதனால் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

    விலை உயர்வால் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் அதன் அறுவடை தொடங்கியுள்ளது.

    இதனால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

    தற்போது, மார்க்கெ ட்டுக்கு வழக்கத்தை விட 40 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை குறைந்ததால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    வரும் நாட்களில் விலை மேலும் குறையக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×