search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகத் திருவிழா"

    • கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
    • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    சென்னிமலை,

    'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது.

    முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 67-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    சென்னிமலை மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர்.

    வைகாசி விசாகத்தினை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்
    • இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11மற்றும்12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கிய விழாவாகும்.

    இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை)தொடங்கி 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.

    11 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறப்பு, மதியம் உச்சிகால பூஜை மாலையில் சமய சொற்பொழிவு, இரவு தேவார இன்னிசை, சமய சொற்பொழிவு, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    12-ந் தேதி விசாகத் திருநாள் காலை கலை மாமணி மணிகண்டன் குழுவினரின் மங்க இசை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு செய்க தவம், பாரதம் காட்டும் வாழ்க்கை நெறி, கந்தபுராணம் காட்டும் பக்த நெறி,

    பெரியபுராணம் காட்டும் பக்தியின் மகிமை, இந்துமதம் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி முதலியவை நடக்கிறது. நள்ளிரவு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்துவருகிறார்.

    • கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அமைத்து சாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்18-ந் தேதி தொடங்கியது.
    • கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரத வீதிகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 50லட்சம் செலவில் கன்னியாகுமரி ரதவீதிகளில் வடிகால் அைமத்துசாலைகள் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரிமாதம்18-ந்தேதி தொடங்கியது.

    ஆனால் பணி தொடங்கி 4 மாதங்களாகியும் இன்னும் முடிவ டையவில்லை. கடந்த 3 மாதங்களாக ரதவீதிகள் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.


    இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாகடந்த3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம்திருவி ழாவான11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. ரத வீதிகள் வழியாகத் தான் தேர் பவனி வரும் என்பதால் ரத வீதிகளை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட ரதவீதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுமத் தலைவர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ்தாமஸ், பூலோக ராஜா, இக்பால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×