search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகவியல்"

    • வணிகவியல் தின விழா நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் நசீர்கான் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் தின விழா நடந்தது. துறைத்தலைவர் நைனா முஹம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர்- முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி பங்கேற்று பேசினார். பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் நன்றி கூறினார். 

    • முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    • அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்றம் விழா 2022-23 நடைபெற்றது.

    அண்ணாமலை பல்கலைக்–கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெழில்முனை–வோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சொ.சசிகுமார் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.திருநாராயணசாமி மற்றும் துறை பேராசிரி–யர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வி.சுரேஷ் முனைவர் எம்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்துத் துறை பேராசிரியர்களும், 150-ற்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார்.
    • வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி, குமரன்கோயில் வடக்கு வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி மங்கையர்கன்னி. இவர்களது இளைய மகள் கிருத்திகா. இவர் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார்.

    அரசு பொதுத் தேர்வில் 591 மதிப்பெண் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார். வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனைப்படைத்த மாணவி கிருத்திகாவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

    ×