search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computer Science"

    • கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முடிந்து பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தீவிர மாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த அளவில் 117 அரசு பள்ளிகள், 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இவற்றில் மொத்தமாக அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் தொழில் கல்வி, கலை பிரிவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளே முக்கியமான நுழைவு வாயிலாக இருக்கிறது.

    பிளஸ்-1 வகுப்பில் எடுக்கும் பாடத்திட்டங்களே மாணவர்களின் கல்லூரி படிப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன. எனவே 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 வகுப்பில் சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து தனியார் பள்ளிகள் தாளாளர் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், தற்போது பிளஸ்-1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். கூடுமானவரை கணிதம், உயிரியல் பாடங்களை தவிர்க்கின்றனர்.

    கலைப் பிரிவில் எந்த பாடத்தை தேர்வு செய்தாலும் அதனுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும் இடம்பெறுவது போல் இருக்கும் குரூப்புகளையே மாணவர்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் பல்வேறு பாடத்திட்டங்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் கற்பிக்கும் வகையில் குரூப்புகளை பெற்றுள்ளனர்.

    இந்த வகை பாடத்திட்டங்களுக்கு இருக்கும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில பள்ளிகளில் முற்றிலுமாக அறிவியல் பாடத்திட்டம் என்ற வகையில் உயிரியல் போன்ற பாடத்தை மட்டுமே கொண்ட குரூப்புகளை வைத்துள்ளன. இவற்றில் கணிதம் கற்பிக்கப்படுவது இல்லை.

    மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தேவையான பாடப்பிரிவுகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 350-க்கும் அதிக மான மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர் கூறுகையில் கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் அடங்கிய குரூப் பாடத் தையே தேர்வு செய்ய விரும்புகிறேன். எதிர்காலத் தில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் பாடத்திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன் என்றார்.

    அதே நேரத்தில் பெரும் பாலான மாணவர்கள் கணிதம் தவிர்த்த கலைப் பிரிவு படங்களுக்கே முக்கி யத்துவம் அளித்து வருகின்ற னர். நீட் தேர்வின் மீதான தயக்கம் காரணமாக பெரும் பாலான மாணவர்கள் உயிரியல் பாடத்தை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டு வதாக தனியார் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்கள் பரவலாக பல்வேறு குரூப்புகளிலும் சேர்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு குரூப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அரசு பள்ளிகளை பொறுத்தவரை கலைப் பிரிவு, வணிகப்பிரிவு, அறிவியல் பிரிவு என்ற பேதங்கள் இல்லாமல் மாண வர்களின் விருப்பம் மற்றும் மதிப்பெண்களை அடிப்ப டையாக வைத்து மாணவர் சேர்க்கை அளிக்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் களுக்கு உயர்கல்வியில் பல்வேறு துறைகளிலும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்கள் பாடத்திட்டங்களை தேர்வு செய்வதில் எந்தவித தயக்க மும் இல்லை.

    அதே நேரத்தில் மாண வர்கள் உயிரியல் பாடத்தை தவிர்ப்பது குறித்து தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில், ஒரு சில மாணவர்களுக்கு உயர் கல்வியில் மருத்துவம் படிக்க விருப்பம் இருந்தா லும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வ தில் தயக்கம் உள்ளது. எனவே அவர்கள் பிளஸ்-1 பாடத்தில் உயிரியலை தவிர்த்த படங்களையே எடுக்க விரும்புகின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மெட்ரிக் பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகளில் கணிதம் அல்லாத உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைந்த பாடத்திட்டங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரி வாக இருந்தாலும், உயிரியல் பிரிவாக இருந்தாலும், கலை பிரிவாக இருந்தாலும் மாணவர்கள் கணிதம் இடம்பெறுவதை தவிர்க் கவே விரும்புகின்றனர்.

    கணித பாடத்தில் பிளஸ்-2 தேர்வில் கேட்கப்படும் சிறப்பு கேள்விகளை எதிர்கொள்வதில் மாணவர்கள் மத்தியில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கணிதம் வேண்டாம், உயிரியல் வேண்டாம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் போதும் என்பதே எதிர்காலத்தை தேடும் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×