search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டியில்லா கடன்"

    • நான்கைந்து ஏக்கர் பயிர் சாகுபடி செய்வோர் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர்.
    • மீதி பணத்திற்கு உரம் தருகிறார்கள். இதில் குளறுபடி நடக்கிறது.

    திருப்பூர்,

    விவசாயிகள் பயிர் சாகுபடி செலவுக்கு மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லா கடன் வழங்குகிறது. நீண்ட கால பயிர்களுக்கு ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். குறுகிய காலப்பயிர்களுக்கு 6மாதத்துக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இந்த ஆண்டு மாநில அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பல்லாயிரம் கோடி ஒதுக்கிய போதிலும் இதன் பயன் அனைத்து விவசாயிகளையும் சென்றடைவது இல்லை என்ற குறை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி கூறுகையில், பயிர்க்கடன், 1.60 லட்சம் ரூபாய் தருகின்றனர். இது இரண்டு ஏக்கர் சாகுபடிக்கு மட்டும் போதுமானது. நான்கைந்து ஏக்கர் பயிர் சாகுபடி செய்வோர் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். சிறிதளவு லாபமும் வட்டிக்கே சரியாக போய்விடுகிறது.இது பெயரளவில் மட்டுமே உள்ளது. பயிர்க்கடன் வாங்குவோருக்கு மொத்தப் பணத்தையும் தருவதில்லை. உரமாகவும் தருகின்றனர். அதுவும் நேரத்தில் தருவதில்லை. இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு எதற்கு செயற்கை உரம்? வட்டி கட்ட தாமதமானால் 'சிபில்' கணக்கில் ஏற்றி விடுகின்றனர். பயனாளிகள் விபரத்தை பட்டியல் ஒட்டுவதில்லை. சிபாரிசு செய்பவர்களுக்கு கடன் தருகின்றனர்.

    தங்கவேல், ஒருங்கிணைப்பாளர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகையில், பயிர் கடனாக, 1.30 லட்சம் ரூபாய் மட்டுமே தருகிறார்கள். மீதி பணத்திற்கு உரம் தருகிறார்கள். இதில் குளறுபடி நடக்கிறது. எந்த விவசாயிகளும் முழு பயன் அடைவதில்லை. கடந்தாண்டு கொடுத்ததை இந்த ஆண்டும் கொடுக்கின்றனர்.ஒவ்வொருவருக்கும் மூன்று லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.100 நாள் தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

    ×