search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கிர காளியம்மன்"

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு உகந்த கவசத்தை பார்க்கலாம்.
    ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
    ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
    ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி
    ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
    ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
    ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
    ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
    ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
    ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
    போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
    போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
    போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
    போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி
    சிம்ம வாகினியே சிரசைக் காக்க
    நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
    கஜமுகன் தாயே கண்களைக் காக்க
    காளி மாதாவே காதினைக் காக்க
    கால ராத்ரீயே கரங்களைக் காக்க
    மகேஸ்வரியே மார்பினைக் காக்க
    ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
    வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
    முண்டமாலினியே முதுகைக் காக்க
    கோரரூபினியே குதத்தைக் காக்க
    துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
    கால கண்டிகையே காலினைக் காக்க
    காக்க காக்க காளியே வருவாய்
    கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
    நாவல் நிறத்தை நாரணி தருவாள்
    வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
    மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.

    திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் 6 விதமான பரிகாரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இந்த ஆலயத்தில் உள்ள வக்கிர லிங்கம் எதிரே உள்ள மணலில் புதைந்து காணப்படும் நந்திக்கு மஞ்சள் குங்குமம் பூமி வழிபாடு செய்தால், அவர் மூலம் சிவன் அருளை பெற முடியும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. எனவே சிவனிடம் செய்ய வேண்டிய பரிகாரங்களை இந்த நந்தி மூலம் பக்தர்கள் செய்கிறார்கள்.

    பவுர்ணமி தோறும் தீப கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 பவுர்ணமி இந்த தீபத்தை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை பேறு வேண்டி காளியம்மன் சன்னதி பின்புறம் தொட்டில் கட்டும் வழக்கம் உள்ளது.

    திருமணத்திற்காக பெண்கள் இந்த மரத்தில் மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் உள்ளது.

    கடன் பிரச்சினை, வழக்குகள், மாமியார் கொடுமை ஆகியவை நீங்குவதற்கு பூட்டு போடும் பரிகாரம் செய்கின்றனர்.

    நாகதோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
    தலக்குறிப்பு :

    கோவிலின் பெயர்:    அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
    கட்டியவர்:    ஆதித்திய சோழன் என்னும் சோழ மன்னன்
    காலம்:    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
    இறைவனின் திருநாமம்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
    தேவாரத் திருப்பெயர்:    அருள்மிகு சந்திரசேகர பிறையணி கொன்றயினான்
    இறைவியின் திருநாமம்: அருள்மிகு அமிர்தாம்பிகையம்மன்
    தேவாரத் திருப்பெயர்:    அருள்மிகு வடிவாம்பிகையம்மன்
    தல விருட்சம்: வில்வம்
    தீர்த்தம்: சூரிய புட்கரணி. சந்திர புட்கரணி
    ஆறு: வராக நதி (எ) சங்கராபரணி
    பூஜை: மூன்று காலம்
    நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

    இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

    பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.

    அமைவிடம்

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என எந்த நகரத்திலிருந்து வந்தாலும் சுமார் 27 கி.மீ. தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 10 கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம்.

    அதே போல் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் திருக்கனூர் என்னும் இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி சுமார் 5 கி.மீ. சென்றாலும் இக்கோவிலை அடையலாம். ‘வராக நதி’ என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் எங்கும் காண முடியாத அரியவகையான மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.

    ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

    திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
    கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.

    இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.

    கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார். கோவில்களுக்கு தானங்கள்பலவும் செய்துள்ளதை வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகிறது. மாதேவியாரின் அரிய திருப்பணியால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் திருக்கோவிலோடு சேர்ந்து அவரது பெயரும் புகழோடு நிலைத்து நிற்கின்றது.

    திருவக்கரை கோவிலின் சிறப்புகள்

    * இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், மூலஸ்தானம் முதலியன நேர்கோட்டில் அமையவில்லை.
    * இத்திருக்கோவிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார்.
    * பிரதான சிவத்தலமான இத்திருத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
    * குண்டலினி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள பெருமையுடையது இத்திருக்கோவில்.
    * இத்திருக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
    * சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது இத்திருக்கோவில்.
    * பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது இத்திருக்கோவில்.
    * சனிபகவான் வாகனமான காகம் எல்லாத் தலங்களிலும் அவருக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால் இங்கு அவருக்கு இடப்புறமாக அமைந்து வக்கிரமாக காட்சியளிக்கிறது.
    * உலகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதா இங்கு வக்கிரகாளியாக நமக்கெல்லாம் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தி அருள்புரியும் திருக்கோலம் ஒரு தனிச்சிறப்பாகும்.

    பிரார்த்தனை பலன்கள்


    வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கையில் பயனடைவர். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.

    திருமணமாகாதவர், பிள்ளைப்பேறு அற்றவர் இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர் பவுர்ணமி தினத்தன்று வக்கிரகாளி அம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி அன்று தரிசித்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பலன் பெற்று வருகின்றார்கள். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பயனடைகிறார்கள்.

    இத்திருக்கோவில் தனியாக அமைந்துள்ள தீப லட்சுமியின் திருக்கோவிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி இந்த அம்மனை கும்பிட்டு மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    ஆலய தலவரலாறு

    முன் காலத்தில் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர் இருந்தது. குண்டல மகரிஷி என்ற முனிவர் வாழ்ந்து இங்கே சமாதி யாகிஇருக்கிறார். அவருடைய பேரனான வக்கிரா சூரனும் அவனுடைய சகோதரி துர்முகியும் சிவ பக்தர்கள். அரியவரம் பெறுவதற்காக நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான்.

    அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்காகாதே என்றார். காலையில் பூஜை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

    உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி,கவுமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றி எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள். அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை.

    அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.
    அதன்படி ஈஸ்வரியை அழைத்து மகாவிஷ்ணு கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்து, பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தால் அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

    வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப்பெயர் பெற்றது. மூலலிங்கம் முகலிங்கமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 10 கி.மீ செல்ல வேண்டும்.

    வடிவாம்பிகையின் பேசும் தோற்றம்

    புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. காலத்தின் கோலத்தினால் மங்கிய வெளிச்சத்திலும் அன்னையின் அருள் திருமுகத்தைப்பார்த்தால் கருணையும் பரிவும் தாண்டவமாடுவதைக் காண்கிறோம்.

    சற்று உற்றுப்பார்த்தால் அன்னை பேசுவது போலவும் மூக்குப்புல்லாக்கு ஆடுவது போலவும் தோன்றி மெய்சிலிர்க்கிறது. சுமார் நான்கு அடி உயரத்தில் விளங்கும் அன்னையின் எழிலையும் அருளையும் கண்டு உய்யவாவது இந்த தலத்தைப்போய்ப்பார்க்க வேண்டும். அன்னையின் சன்னதி தெற்குப் பார்த்தது. பெரும்பாலான திருக்கோயில்களில் கிழக்கு நோக்கி காட்சி தரும் தேவி, இங்கு திருவெற்றியூர் வடிவுடையம்மைப் போல தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். இச்சன்னதியின் முன்மண்டபம் அழகிய எட்டு தூண்களால் ஆனது. இச்சன்னதியில் இடப்புறம் பள்ளியறை உள்ளது. சந்திரசேகரர் கிழக்குப்பார்த்து எழுந்தருளியிருக்கிறார்.
     
    அன்னை துர்க்கையின் உருவம் கருத்தைக் கவருகிறது. ஐந்து அடிக்கு மேல் உயரமுள்ள சிற்பத்தில் உள்ள அஷ்ட புஜங்கள் மகிஷனின் தலைமேல் லாவகமாக நிற்கிற கோலம் மிக அழகியது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள் என்று கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் அருளைப் பற்றிப் பலமாகப் பேசுகிறார்கள். சந்திரசேகரரின் சன்னதிக்கும் தெற்குப் பக்கத்தில் வக்கிராசுரனுடைய தாத்தா குண்டல மகரிஷியின் சமாதி இருக்கிறது.

    அதன் மேல் வக்கிரன் பூஜித்த கண்டலிங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். வடக்குபக்கத்தில் ஸஹஸ் ரலிங்கத்துக்குச்சிறிய கோவில் ஒன்று உள்ளது. அதன் பக்கத்தில் வக்கிரனை அழித்த வரதராஜப்பெருமானின் திருக்கோவிலைக்காணலாம். எங்கும் உள்ளது போல் இல்லாமல் திருமாலின் கரத்தில் சக்கரம் பிரயோகப்பாணியில் அமைந்திருக்கிறது. தாயாரின் சந்நிதி தனியாகக் கிடையாது.

    ஆலய அமைப்பு

    பொதுவாக வேறு எங்கும் அதிகமாகக் காணப் படாத வகையில் கோவிலின் அமைப்பு இருக்கிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் கோவில் அமைந்துள்ளது. கருவறைக் கோவிலும் அதைச் சார்ந்த கோவில்களும், மண்டபங்களும், சுற்றுச் சுவர்களும், கோபுரமும் தனியாக அமைந்துள்ளன. தற்போதுள்ள வக்கிரகாளி கோவிலும், வக்கி ரலிங்கம் கோவிலும், சந்திரசேகர் கோவிலுக்கும், கோபுரத்திற்கும் வெளியில் முன்புறத்தில் தனியாக இருந்திருத்தல் வேண்டும். பிற்காலத்தில் இவை இரண்டாவது ராஜாதிராஜன் காலத்தில், புதிய ராஜகோபுரமும், மதிற்சுவரும் எழுதப்பட்டுக் கோவில் முன்புறத்தை விரிவாக்கப்பட்ட போது மூலக் கோவிலுடன் அவைகள் இணைந்துள்ளன.

    விண்ணளாவி நிற்கும் பெரிய ராஜகோபுரத்தின் உள்ளே முதலில் நாம் நுழைகிறோம். ராஜகோபுரத்தின் உட்புற மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவில் தாமரையும், சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலர்களும் தென்படுகின்றனர். ராஜகோபுரத்தின் அடிப்படை கருங்கல்லாலும், மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளன.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது திருவக்கரை ஆளுடையார் கோவிலில் இத்திரு கோபுரங் கண்டர் சூரியன் திரு கோபுரமென்னும் பெயரால் செய்வித்தான். அம்மை அப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்” எனும் கல் வெட்டிலிருந்து, இந்தக் கோபுரம் கண்டர் சூரியன் சம்புவராயனால் கட்டப் பெற்றதால் ‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’ என்னும் பெயரைப் பெற்றது என அறிகிறோம்.

    இவனே, கி.பி.1193-ல் மூன்றாவது குலோத்துங்கனின் 16-வது ஆட்சி ஆண்டில் இருப்பு நாராசம் உட்பட ஆயிரத்து நூற்று எண்பத்து இரண்டு பலம் தாரா எடையுள்ள ஐந்து நிலக் குத்து விளக்குகள் இரண்டினைக் கோவிலுக்குத் தானமாகவும் அளித்துள்ளனர். ராஜகோபுரத்தைக் கடந்ததும், இடப்பக்கம் வக்கிரகாளியின் திருக்கோவில் காட்சியளிக்கிறது. அக்கரையில் உள்ளதால் வக்கரைக் காளியாகவும், வக்கிர காளியாகவும் இது விளங்குகிறது.

    இந்தச் சிறு கோவிலுக்கு முன்னால் காந்தாரக் கலையழகுடன் கொண்டையிட்ட இரண்டு பாலகியர் நிற்கின்றனர். உருண்டு திரண்ட பொன்மேனி முழுவதையும் கலையழகுடன் காட்டி நிற்கும் இச்சிற்பங்களின் ஒய்யார அழகுக்கு ஒப்புவமையே கூற முடியாது. இயற்கையாக நிற்கும் இந்த எழில் நங்கையரைப் பூமியிலிருந்து வருவது போல், முழங்கால் வரையுள்ள இச்சிற்பங்கள் சிறந்த கலைஞர்களுக்கு ஆழ்ந்த தத்துவங்களைப் போதிக்கின்றன.

    நூற்றுக்கால் மண்டபம்

    ராஜ கோபுரத்தைக் கட்டிய பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயனே (கி.பி.1179-ல்) இந்த நூற்றுக்கால் மண்டபத்தையும் கட்டினான். அதனால் ‘கண்டர் சூரியன் திருமண்டபம்’ என்று இதற்கு பெயர். அமர்ந்த நிலையில் உள்ள எட்டு சிம்ம தூண்களிடையே இந்த மண்டபம், இரு பக்கமும் இரண்டு சக்கரங்களுடன் இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல் தேர் அமைப்பில் இருக்கிறது.

    மண்டபத்தின் உட்புறச் சுவரில், ஒரு குதிரையின் மீது வலக்கையில் வாள் ஏந்தி வீரன் ஒருவன் செல்வது போன்ற சிறு சுவர் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டிய கண்டர் சூரிய சம்புவராயன் சிற்பமாக இது இருக்கலாம்.

    திருநந்தி

    மண்டபத்தின் தென்புறம் பெரிய நந்தி உள்ளது. பலி பீடத்தை அடுத்து காதுகளை உயர்த்தி சற்று வலப்புறம் சாய்ந்து சிரிக்கும் பாவனையில் உள்ள இந்த நந்தி, ராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் நேராக இல்லாமல், வடப்புறமாகச் சற்று நகர்ந்து வக்கிரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. கொஞ்சம் தள்ளியுள்ள சிறு விநாயகர் கோவிலுள்ள கணபதியின் திருவுருவம் பெரியதாக இருக்கிறது.

    கிளிக் கோபுரம்

    மூலக் கோவிலின் நுழைவு வாயிலின் முதற்கோபுரம் இதுவே. பின்னர் கோவிலின் முன்புறம் விரிவாக்கப்பட்டு உள்ளது. கட்டப்பட்ட ராஜகோபுரத்தைவிடச் சிறிது. தற்போது ‘கிளிக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    குண்டலி மகரிஷி

    வெளிச்சுற்றில் கருவறைக்குத் தென்புறம் ‘குண்டலி மகரிஷி’யின் சமாதியும், சமாதியின் மேல் சிவலிங்கமும், நிறுவப் பட்டுள்ளன. இந்தத் தனிக் கோவிலின் முன்புறமுள்ள துவாரபாலகர் குறிப்பிடத்தக்கவர்.

    வக்கிரம் ஆனது ஏன் ?

    காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் இவள் கோவில் கொண்டி ருக்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் வக்கிர நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பொதுவாக எல்லாக் கோவில்களிலும் கோபுர வாசலில் இருந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் திருவக்கரைக் கோவிலில் ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திர மவுலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் காணப்படுகிறது.

    இத்தல காளியின் வக்கிர நிலையினாலேயே தலமும் வக்கிர நிலையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் வடிவமைப்பு மட்டுமல்லாமல் சிலைகளும் வக்கிர நிலைகளிலேயே காணப்படுகின்றன.

    விநாயகர் தன் துதிக்கையை இடது பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கமாக சுருட்டி வைத்து கொண்டிருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்துக்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து காணப்படுகிறது. இங்குள்ள நந்தி கருவறைக்கும் கொடிமரத்திற்கும் நேராக இல்லாமல் வடப்புறமாகச் சற்று விலகி வக்கிரமான நிலையில் இருக்கிறது.
    செல்வது எப்படி ?

    திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுவை செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து திருவக்கரைக்கு நேரடியாக பேருந்து உள்ளது.

    சுந்தர விநாயகர் சன்னதி

    இத்திருக்கோவிலின் நேர் எதிர் வீதியில் சுந்தர விநாயகர் சன்னதி தனிக் கோவிலாக அமைந்து காட்சி தருகிறது. இங்கு விநாயகர் சுமார் 10 அடி உயர சிலையாக கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.

    கல்வெட்டுகள்

    முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து (சாலி வாகன சக ஆண்டு 1352 (கி.பி. 1430)) செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர் களும் அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோவிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுக்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு கல்வெட்டும் புதிய வரலாற்றுச் செய்திகளை அருமையாக விளக்குகிறது.

    கண்டலிங்கம்

    காளிக்கோவில் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் கோவில் உள்ளது. இது கண்டலிங்கம் என்றும் அழைக் கப்படுகிறது. இந்த லிங்கத்தை வக்கிராசூரன் பூஜித்ததால் இதற்கு வக்கிரலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

    இந்த லிங்கம் கோடைக் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக் காலங்களில் லிங்கம் வெப்பமாகக் காணப்படுமாம். லிங்கத்தின் மேற்பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்தக் கோவிலுக்குத் தனி நந்தியும் உண்டு. இது இராசசிம்ம பல்லவன் காலத்திய லிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    சிவலோகமுடைய பரம சுவாமிகளின் திருக்காட்சி


    கருவறையில் போய் நின்றதும், கயிலயங்கிரிக்குள் நிற்கும் உன்னத உணர்வால் உடல் புல்லரிக்கிறது. கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதியும் குடி, பிரம்மமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்த ஓர் உருவாய் ‘முகலிங்கர்’ காட்சி தருகிறார். வெள்ளியங்கிரி வெற்புடையானே நம் எதிரில் இருப்பது போன்ற உள்ளுணர்ச்சி எழுகிறது.

    அம்பிகையின் கோவில்

    கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அம்பிகைக்குத் தனிக் கோவில் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் வேரூன்றியது. அதன்படி, அருள்மிகு வடிவாம்பிகையின் கோவில் தெற்கு நோக்கித் தனிக் கோவிலாகத் திகழ்கிறது. எட்டு அழகிய தூண்கள் உடைய மண்டபத்தின் கூடிய கோவில், ஒரு தூணில் ‘பின்னால் நடனம்’ ஆடும் இரண்டு பெண்கள் காட்சி அளிக்கின்றனர். அன்னை வடிவாம்பிகை தெற்கு நோக்கி நின்று அருள் புரிகின்றாள். அவளுக்கு நேர் எதிரில் சுடுகாடு இருக்கிறது.

    முப்பெரும் பயன்கள்

    வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்திருத்தலத்துக்கு வந்து வக்கிரகாளி, வக்கிர லிங்கம், வக்கிரசனி பகவான் முதலியோரைத் தரிசித்து, வக்கிரமாகக் கட்டப்பட்டுள்ள இந்த வக்கிரக் கோவிலையும் வலம் வந்தால், வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர். வேறெங்கும் எளிதில் காணப்படாத மும்முக லிங்கம், சகஸ்ரலிங்கம், பிரயோக சக்கரத்துடன் தனித்து நிற்கும் திருமால், அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய பிரம்மாண்டமான வாயிற் காவலர், ராஜசிம்மன் காலத்திய பதினாறுபட்டை லிங்கம் முதலியவற்றைக் கண்டு மகிழலாம்.

    முக்கியத் திருவிழாக்கள்

    * மாதாந்திர பவுர்ணமி விழா மற்றும் பிரதி அமாவாசை விழா
    * சித்ரா பவுர்ணமி உற்சவம்
    * ஆடிக் கிருத்திகை உற்சவம்
    * கார்த்திகை தீப உற்சவம்
    * தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம்
    * தை கிருத்திகை
    * தமிழ் வருடப்பிறப்பில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம்
    * பிரதோஷ உற்சவம்

    மேற்காணும் உற்சவங்களைத் தவிர பிரதி பவுர்ணமிதோறும் அருள்மிகு வக்ரகாளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், விசேஷ பூஜைகளும், இரவு 12 மணிக்கு ஜோதி பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு பிரதி மாத பவுர்ணமியன்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
    இந்தக் கோவிலில் பிரதி அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீ வக்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பகல் 12 மணியளவில் தீப தரிசனமும் நடைபெறும்.

    இவ்வாலயத்தில் ஸ்ரீ வக்ரகாளியம்மன் சித்ரா பவுர்ணமி உற்சவத்தன்று இரவு வீதியுலாக்காட்சி, வாணவேடிக்கைகளுடன் அதிவிமர்சையாய் நடைபெறும்.
    இத்திருக்கோவில் நடைமுறையில் நெய் தீப தரிசனமே நடைபெறுகிறது. பக்தர்கள் சூடம் வாங்கி வருவதனை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    அபிஷேக விபரங்கள்

    1.பால் அபிஷேகம்:-- ரூ-.250
    பலன்கள்: எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.
    2.அனைத்து அபிஷேகம்:-- ரூ-.1,000
    பலன்கள்: தொழிலில் மேன்மை கிடைக்கும். கடன்கள் நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம், பதவி உயர்வு கிடைக்கும்.
    3.சந்தன காப்பு அலங்காரம்:-- ரூ-.2,500
    பலன்கள்: ராகு, கேது தோஷம் நீங்கிடும், திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.

    தொடர்புக்கு

    அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
    திருவக்கரை,
    வானூர்வட்டம், விழுப்புரம் மாவட்டம், பின்கோடு-604304

    Website:www.vakarakaliammantemple.org
    E-mail:vakrakaliamman@gmail.com
    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
    “சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்
    இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச
    அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
    மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”

    -திருஞானசம்பந்தர்

    தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

    இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

    பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.

    ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

    திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
    கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார்.

    இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர். 
    ×