search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர்கள்"

    • மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சுற்றியுள்ள அத்திப்பட்டு, வல்லூர், கொண்டக்கரை, காட்டுப் பள்ளி, வடசென்னை, உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும், அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் நிறுவனம், துறைமுகம், நிலக்கரி முனையம் தனியார் தொழிற் சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.

    இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணலி சாலை, வண்டலூர் சாலை, பொன்னேரி சாலை, எண்ணூர் கடற்கரை சாலை வழியாக பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலைகளில், நீண்ட தூரத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை சாலையின் ஓரத்தில் டிரைவர்கள் நிறுத்தி சமையல் செய்து சாப்பிட்டும், ஓய்வெடுத்தும் செல்வது வழக்கம். இவ்வாறு சாலையின் ஓரத்தில் நிற்கும் லாரிகளை குறிவைத்து மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் அத்திப்பட்டு நிலக்கரி முனையத்தில், லோடுமேன் ஆக வேலை செய்து வரும் எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இரவு வேலை முடித்துவிட்டு நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்றதால் பாலசந்தரை கொள்ளை கும்பல் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதனால் மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வந்து செல்லவே லாரிடிரைவர்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை குறிவைத்து அடிக்கடி நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் லாரி டிரைவர்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. காமராஜர் துறை முக சாலையில் இருந்து, நிலக்கரி முனையத்திற்கு 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை பயன்படுத்தி லாரிகள் சென்று வருகின்றன.

    கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை என்றனர்.

    ×