search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன் கோர்ட்டு"

    பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது இன்று தெரியும். #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார்.

    அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

    இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.



    இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.

    இங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.

    அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

    கிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.

    மேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர்.

    இப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர்வாதங்கள் நடைபெற்றன.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்.

    அப்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றிய தனது தீர்ப்பை மாஜிஸ்திரேட்டு வழங்குகிறார். அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டால், இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு.

    அதேபோன்று நாடு கடத்த தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் அந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்வதற்கும் அதே 14 நாட்கள் அவகாசம் இருக்கிறது.

    ஆனால் நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை மந்திரி உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார்.

    விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது. அந்தச் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

    இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘விஜய் மல்லையாவுக்கு டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும்; சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி செய்து தரப்படும்’’ என கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    தீர்ப்பு வரவுள்ள நிலையில் விஜய் மல்லையா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், ‘‘நான் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கவில்லை. கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் கடன் வாங்கியது. வர்த்தக தோல்வியினால் பண இழப்பு ஏற்பட்டது. உத்தரவாதம் அளித்தவர் மோசடி பேர்வழி அல்ல’’ என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #VijayMallyaextradition
    லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானான். #DawoodIbrahim
    லண்டன்:

    1993-ம் ஆண்டில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான்.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகளை செய்து ஆதரித்து வருகிறான். நிழல் உலக வாழ்க்கையான தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
     
    இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டிவாலா என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் கடந்த 19-ம் தேதி நியூ ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட ஜபிர் மோட்டிவாலா பத்தாண்டு காலத்துக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான்.


    தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது மனைவி மஹ்ஜபீன், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மஹ்ரூக், மெஹ்ரீன், மாஸியா, மருமகன்கள் ஜுனைத், அவுரங்கசிப்  ஆகியோரின் வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டிவாலா தான் கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவனிடம்  போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் மொத்த சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றிய ரகசியங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விசாரணை காலம் முடிந்து, சிறையில் இருந்தவாறு ஜபிர் மோட்டிவாலாவை போலீசார் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இன்றைய விசாரணையின்போது தனது பெயரை ஜபிர் சசிக் என்று மோட்டிவாலா தெரிவித்ததாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஜபிர் மோட்டிவாலா சார்பில் இன்று ஜாமின் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அவன் மீதான வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டன. #DawoodIbrahim #JabirMoti #WestminsterCourt 
    விஜய் மல்லையாவுக்கு மும்பை ஜெயிலில் டி.வி., காற்றோட்ட வசதி கொண்ட அறை ஒதுக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ வீடியோ தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #UKCourt #CBI
    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். ஆனால் அங்குள்ள சிறைகளில் போதிய வசதி கிடையாது. அவர் மோசமாக நடத்தப்படுவார் என விஜய் மல்லையாவின் வக்கீல் வெஸட் மினிஸ்டர் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து இந்திய சிறைச்சாலையின் தன்மை குறித்தும், அதில் உள்ள வசதிகள் குறித்தும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள ஜெயிலில் அறை எண் 12-ல் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டனர். அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்திய சிறைகளில் சுகாதார வசதி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அறிய இங்கிலாந்து கோர்ட்டு விரும்பியது.

    இந்திய சிறைகள் சுகாதாரமாக இருக்கிறது என்ற ஆதாரத்துக்காக அந்த வீடியோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் சிறை கிழக்கு பார்த்து உள்ளது. இதனால் அங்கு சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “சிறை அறையில் எதிர் எதிராக ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் இடவசதி உள்ளது. எனவே அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தவித தடையும் இருக்காது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். #VijayMallya #UKCourt #CBI
    ×