search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை ஊழியர்கள்"

    • ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர்.
    • பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் ரேசன் கடைக்கு வர கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டு தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம், ஒரு முழுக்கரும்பு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற் கான டோக்கன் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 224 ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 6 லட்சத்து 242 பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப் பட்டது.

    ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுக ளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 ரேசன் கார்டுதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை இப்பணி நடக்கும். வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டை தாரர் களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தகுதியுள்ள ரேசன் கார்டுதாரர்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி ரேசன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
    • ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    • நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ரேசன் கடை ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுக்குத் தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகைப் பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோதச் செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×