search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்அலர்ட்"

    • மேலும் நாளை(3-ந் தேதி)யும் இதுபோல் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

    இந்த சூழலில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை மையம், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது குறிப்பிட த்தக்கது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை(3-ந் தேதி)யும் இதுபோல் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும் இந்த நாட்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தடைக் காலம் முடிந்து நேற்று குளச்சல் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலத்த காற்று காரணமாக உடனடியாக கரை திரும்பி விட்டனர்.

    ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்தமோகன் ஆகியோர் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தீயணைப்பு படையினர் உரிய பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் அரக்கோணத்தில் இருந்து 2 கம்பெனி பேரிடர் மீட்பு குழுவினரும் குமரி மாவட்டம் வந்தனர். இந்த குழுவில் இருந்த 40 வீரர்களும் உடனடியாக வெள்ளம் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் கிள்ளியூர், விளவங்கோடு தாலுகாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் பாது காப்பு நடவடிக்கையாக கடலோரம் மற்றும் நீரோடை பகுதி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு மாற்ற ப்பட்டுள்ளனர்.

    குமரி மாவட்ட தீய ணைப்பு அதிகாரி தென்னரசு கூறுகையில், இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு படையினர் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்றார்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் வருகிற 4-ந்தேதி வரை இடி-மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் 2 மாவட்டங்களுக்கும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.வெள்ள பாதிப்புகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 04622-501012 என்ற தொலைபேசி எண்ணை கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் 04633-290548 என்ற எண்ணை அறிவித்துள்ளார்.

    நீர்நிலைகளின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

    ரெட் அலர்ட் அறிவிப்பையொட்டி 2 மாவட்டங்களிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். வருகிற 4-ந்தேதி வரையிலும் தீயணைப்பு துறையினர் விடுப்பு எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து மீட்பு, பாதுகாப்பு உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக சரிந்து காணப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 6.70 அடியாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2½ உயர்ந்துள்ளது.

    இன்று காலை அணை யின் நீர்மட்டம் 9.20 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் மழையும் பெய்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடை இன்றி குடிநீர் வழங்க படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 71, பெருஞ்சாணி 61, சிற்றாறு-1 60.6, சிற்றாறு-2 60.,2 பூதப்பாண்டி 35.2, களியல் 71.4, கன்னிமார் 51.4, கொட்டாரம் 26.2, குழித்துறை 61, மயிலாடி 36.6, நாகர்கோவில் 43, புத்தன்அணை 59.4, சுருளோடு 44.6, தக்கலை 46.3, குளச்சல் 22.4, இரணியல் 37.4, பாலமோர் 70.2, மாம்பழத்துறை யாறு 76, திற்பரப்பு 58.6, ஆரல்வாய்மொழி 24, கோழி போர்விளை 7.8, அடையா மடை 73, குருந்தன்கோடு 29, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைக்கிடங்கு 74, முக்கடல் 37.2.

    ×