என் மலர்
நீங்கள் தேடியது "மோடி கண்டனம்"
- போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
- தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார். அவரை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்திருந்தனர். திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டுவெடிப்பில் 11 சீக்கியர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சோகமான தருணத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று வெளியுறவுத் துறை அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாகவும் சுஷ்மா டுவிட்டரில் கூறியுள்ளார். #JalalabadBlast #ModiCondemn






