search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமூடி கொள்ளையர்கள்"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.
    • போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன். இந்தப் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர். காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் அவர்களை பார்த்தார். இதையடுத்து குடியிருப்புவாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த நிலையில் நேற்று சின்னையா கார்டன் மற்றும் டி .எம்.எஸ்.நகர் பொதுமக்கள், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து, கொள்ளையடிக்க முயன்ற அந்த முகமூடி திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிட ரோந்து பணி மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.
    • போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை ஜவான் பவன் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் சண்முக ஞானிகள் சித்தர் பீடம் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று இரவு பூசாரி முருகையன் வழக்கம் போல் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்கு கோவிலுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து பூசாரி முருகையன் உடனடியாக பீரோவை சென்று பார்த்த போது அதில் வைத்திருந்த2 வெள்ளி கிரீடம் மற்றும் தங்க தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்பு லியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து 2 கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத் தாலி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. திருடி சென்ற பொருட்க ளின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்க ளை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில் முகமூடி கும்பல் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு கோவில்பத்து பகுதியில் நேற்றிரவில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் 2 பேர் சுற்றி வந்துள்ளனர். அவர்கள் வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் நாய்கள் சத்தம் போட்டு விரட்டியதால் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அப்பகுதி வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகி உள்ளது. இரவில் முகமூடி கொள்ளை கும்பல் நடமாடும் காட்சிகள் மற்றும் நாய்கள் விரட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில் முகமூடி கும்பல் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×