search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக சுருக்கம்"

    • பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
    • சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.

    வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.

    பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:

    தேவையானவை:

    அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்

    பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்

    மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.

    முகச்சுருக்கத்துக்கான பேக்:

    தேவையானவை:

    தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்

    தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.

    முகத்தொய்வை நீக்கும் பேக்:

    தேவையானவை:

    யோகர்ட் - 5 டீஸ்பூன்

    காபித்தூள்- கால் டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.

    கருவளையத்திற்கான பேக் :

    தேவையானவை:

    தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்

    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

    தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    • உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்.
    • தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.

    வயது 30-யைத் தாண்டியதும், நம் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புகள் கரையும். இதனால் சருமம் தளர ஆரம்பிக்கும். முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது''. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

    1. ''விளக்கெண்ணெய், சருமப் பிரச்னைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

    3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

    4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம்.

    5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

    6 கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

    7 நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும்; வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

    8 உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

    9 கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

    10 தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்!''

    • சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும்
    • சருமத்தை வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வரலாம்.

    வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.

    சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும். எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம்.

    வாழைப்பழ பேஸ் பேக்

    இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

    தயிர் பேஸ் பேக்

    தயிர் மாஸ்கிற்கு இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சியிலிருந்து விடுபடலாம். ஆனால் எண்ணெய் சருமத்தில் இந்த செய்முறையை முயற்சிக்காதீர்கள்.

    அரிசி பேஸ் பேக்

    இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலக்கவும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முழு முகத்திலும் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவுவது நல்லது. அரிசி மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் இருப்பதால், கொரிய தோல் பராமரிப்புப் பொருட்களில் அரிசி மாவு அல்லது தண்ணீர் கண்டிப்பாக சேர்க்கப்படும்.

    தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.

    அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.

    ×