என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "face wrinkle"
- அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
- குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள்.
கொஞ்ச நாளாக ஆன்மீகமே தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் மருத்துவ கருத்துக்கள் விட்டுப் போகின்றதே என்ற கவலையும் நெருடலாய் இருக்கின்றது.
இரண்டும் கலந்து ஒரே கட்டுரையில் கொண்டு வருவது என்பதும் சரிப்படாது. ஆகவே அவ்வப்போது மாற்றி எழுதலாம் என்ற நினைப்பேன் இம்முறை மருத்துவக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்வு. நன்கு அறிந்த ஒரு பெண்மணி. தனது தோற்றத்திற்கு அதிக கவனம் கொடுப்பவர். அதாவது சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு என எல்லாவற்றிலும் கவனமாய் இருப்பவர். அவரை சில வருடங்களுக்கு பிறகு நான் சந்திக்க நேர்ந்தது.
முகத்தில் வயதுக்கு மீறிய கோடுகள், சுருக்கங்கள், முதுமை தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே மாறி இருந்தது. பார்த்தாலே ஏதோ உடல் நலம் இல்லாதவர் போல் இருந்தார்.
காரணம் கேட்டபோது வாழ்வில் ஏற்பட்ட சில பாதிப்புகள், வேதனைகள் அதிக மன உளைச்சலை தந்ததாகவும் இதனால் சர்க்கரை உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றார்.
சிலருக்கு காலையில் எழுந்தவுடனேயே ஜிலேபி மற்றும் பால் அருந்துவது வழக்கம். சிலர் இட்லி, தோசை, உப்புமா, கஞ்சி என எதற்கும் சர்க்கரை போட்டுக் கொள்வர். சிலர் டீ, காபியினை கூட பாயாசம் போல் சர்க்கரை சேர்த்து அருந்துவர்.
இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கொலாஜன் பாதிப்பு ஏற்படுகின்றது.
* அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
* கொலாஜன், எலாஸ்டின் இரண்டுமே சரும கட்டமைப்பிற்கு காரணமாகின்றது.
* அதிக சர்க்கரை உணவு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்து கின்றது. இந்த வீக்கம் சரும திசுக்களை பாதிக்கின்றது. தொடர் வீக்கம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
* உடலுக்குரிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தியினை உடல் இழக்கின்றது.
* இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகின்றது.
* சருமம் சொர சொரப்பாக இருக்கும்.
* சருமத்தில் திட்டு, புள்ளிகள், கறுப்பு போன்றவை ஏற்படுகின்றது.
* சருமம் தொய்ந்து வலுவிழந்து காணப்படுகின்றது.
எனவே சர்க்கரையைத் தவிர்ப்பதே பல நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள். இதில் அனைத்து பிரிவுகளும் அடங்கும். வெள்ளை சர்க்கரை கூடுதல் பாதிப்பினைக் கொடுக்கும். மற்ற பிரிவுகளை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
முதலில் ஒரு மாதம் இவ்வாறு இருந்து பாருங்கள். கேக், சாக்லேட், பிஸ்கட், வெள்ளை சர்க்கரை இனிப்பு இவை அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்தித்தான் பாருங்களேன்.
கடந்த சில மாதங்களாக வெய்யிலின் கடுமை தாங்காது மயக்கம், ஜுரம், சோர்வு என பாதிப்புக் கடுமையாய் இருந்தன. இதில் 'மைக்ரேன்' பாதிப்பு தலைவலி எனக் கூறியவர்களும் அதிகம்.
இந்த தலைவலி வருவதற்கு முன், வந்த பிறகு, தலைவலி போன பிறகு என்ன அறிகுறிகளைக் காட்டும். முதலில் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்.
* உடைக்கும் தலைவலி அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.
* வெளிச்சம், சத்தம், நல்ல மனம் இவை கூட தொந்தரவாக இருக்கும்.
* எரிச்சலுடன் இருப்பர். முகம், கழுத்து, மண்டை இவற்றில் வலி இருக்கும்.
* மூக்கடைப்பு இருக்கும்.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இருக்கும்.
* வயிறு உப்பிசம், ஜீரண கோளாறு இருக்கலாம்.
மைக்ரேன் தலைவலி:
* மைக்ரேன் தலைவலி துடிக்கும் தலைவலியாக இருக்கும்.
* அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.
* வெளிச்சம் ஆகாது. தலை வலியுடன் வயிற்று பிரட்டல் வாந்தி என இருக்கும்.
* சற்றும் நகரக் கூட முடியாது.
* காரணமற்ற சோர்வு, அதிக கொட்டாவி இருக்கும்.
இந்த அறிகுறிகள் சாதா தலைவலியில் இருந்து மாறுபட்டவை. அதிக முறை சிறுநீர் போகும். கொட்டாவி வரும். சிலர் சாக்லேட் சாப்பிட்டவுடன் ஏற்படும். இவை அனைத்தும் 'நான் வந்து விட்டேன்' என மைக்ரேன் சொல்லும் அறிகுறிகள்.
* மனச்சோர்வு, திடீரென்று உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினை, கலங்களான பார்வை. இவை கூட மைக்ரேன் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உணர்ந்து கொள்ளும் அறிகுறிகளாகத் தெரியும்.
* இந்நேரங்களில் நெய், வெண்ணை, சீஸ், கொட்டை வகைகள், மது, புளித்த உணவுகள், ஊறுகாய் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.
இது மைக்ரேன் தான் என உணர்ந்தவர்கள் வெளிச்சம், இல்லாத அறையில் இருப்பது, வெகு வெதுப்பான நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பது. மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றினை செய்யலாம். ஆயினும் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
* தலைவலி ஆரம்பிக்கும் முன்போ அல்லது அப்போதோ பார்வையில் மாறுதல்கள் ஏற்படலாம்.
* கை, கால், முகம் இவற்றில் குறுகுறுப்பு உணர்வு இருக்கலாம்.
* பேச்சு தடுமாற்றம் இருக்கலாம்.
* காதில் சத்தம், ஒரு பக்க முகம், உடல் பலமிழந்தது போல் இருக்கலாம்.
* இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவை.
* மைக்ரேன் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.
* குடும்ப ரீதியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஏற்படுகின்றது.
* அதிக மன உளைச்சல், படபடப்பு, தூக்கமின்மை இவை இந்த பாதிப்பினை கூட்டலாம்.
* ஹார்மோன் மாறுபாடு ஏற்படும் காலங்கள், சீதோஷ்ண நிலை மாறுபடும் காலங்கள், சில வகை மருந்துகள் அதிக உடற்பயிற்சி, புகையிலை, சிகரெட், சில வகை உணவுகள் ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
மருத்துவ கருத்துக்கள் விழிப்புணர்விற்காக எழுதப்படுபவை தானே தவிர, தானே முடிவு செய்து தானே சிகிச்சை செய்து கொள்வ தற்காக அல்ல. ஆக படியுங்கள். அறிந்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாதீர்கள்.
* நீங்கள் முயற்சி செய்யாமல் வேகமான எடை குறைவு ஏற்படும் போது
* தொடர் சோர்வு இருப்பது. போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாகவே இருப்பது.
* தொடர்ந்து வலி எந்த காரணமும் இன்றி இருப்பது, சாதாரண வலி நிவாரணிகள் மூலம் பயன் இல்லாது இருப்பது.
* உடல் மஞ்சள் நிறம், கண்ணில் மஞ்சள் நிறம், உடல் அரிப்பு போன்றவை (இது மஞ்சள் காமாலை பாதிப்பால் இருப்பதுதான். என்றாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது)
* சரும மரு, மச்சம் இவற்றில் மாற்றம், சரும புண்கள் ஆறாது. ரத்தம் கசிதல்.
* கழிவு வெளிப் போக்கில் ரத்தம், அடிக்கடி வயிற்றுப் போக்கு அடிக்கடி மலச்சிக்கல்.
* சிறுநீர் செல்லும் போது வலி நிற மாற்றம்.
* விழுங்குவதில் கடினம்.
* மாத விலக்கு சுற்றில் மாற்றம் போன்றவை உடனடி யாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.
1, ரெடினாய்டு, சரும பராமரிப்பில் வெளிப்புற இணைப்புத்திசுக்களை (Collagen) மற்றும் தோல் திசுக்களை (Skin Cells) புதிதாக உற்பத்தி செய்கிறது. நீங்கள் 30 வயதானவராக இருந்தால் உங்கள் சரும பராமரிப்பு முறைகளில் கண்டிப்பாக ரெடினாய்டு உபயோகியுங்கள். நீங்கள் ரெடினாய்டு உள்ளடங்கிய சரும பராமரிப்பு சாதனங்களை தேர்ந்தெடுங்கள். ரெடினாய்டு ஒரு சிறந்த முகப்பரு தடுப்பானாக செயல்படுகிறது. இது சருமச் சுருக்கங்கள் வராமல் தடுப்பதோடு முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. மேலும் இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
2. உங்கள் சருமம் வயதான தோற்ற்றமடைய காரணம் சருமத்தில் வறட்சியே. எனவே நீங்கள் கட்டாயமாக சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க வேண்டும். அதனால் நீங்கள் முப்பது வயதடைந்ததும் சருமத்திற்கு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை அதிகரிக்கவும். சரும மாய்ஸ்ட்ரைசர்களுக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் இடைவெளி மிகக் குறைவானதாகவும் எப்போதும் உங்கள் சருமம் நீர்ச்சத்துடை உடையதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணங்களின் போதும் கண்டிப்பாக மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும்.
3. நீங்கள் முப்பது வயதை அடைந்திருக்கும் போதே உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பயனுள்ளவைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சரும பராமரிப்பு பொருட்களையே மேலும் தொடர்ந்தால் உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கு கிடைக்காது, அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களில் முதிர்ந்த தோற்றத்தை தடுக்கும் மூலக்கூறுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உயர் ரக பிராண்டுகளில் உள்ள சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பொருட்களை நீங்கள் உபயோகிக்கலாம்.
4. வயது முதிர்ச்சியையும் பாலின வேறுபாட்டையும் தாண்டி சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்போதுமே உங்கள் சருமத்திற்கு கெடுதல் தரக்கூடியது தான். சரும முதிர்ச்சியை தடுக்கும் சரும பராமரிப்பு முறைகளை தொடங்கியிருப்பின் அதிகமாக வெயிலில் செல்வதை தவிருங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் நிலையான இளமைப்பொலிவோடும், சரும நிறம் மாறாமலும் இருக்கும். முப்பது வயதிற்கு மேல் வீட்டிலேயோ அல்லது அலுவலங்களிலோ உள்ளேயே இருந்து வேலை செய்வதை அதிகப்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கும்
5. உடலில் வயதான தோற்றத்தை முதலில் எடுத்துக்காட்டுவது கண்களும் அதன் சுற்றுப்புறமும் தான் சொறி போன்ற அலர்ஜியான கண்ணிமைகள் அல்லது காக்கைச்சுவடு போன்ற கண்ணிமை கோளாறுகள் கண்ணைச் சுற்றியுள்ள சருமத்தை மிகவும் பலவீனமாகவும் சுருக்கங்கள் உடையதாகவும் மாற்றுகிறது. இதற்கு கண்களுக்கு பிரத்யேகமான அதிக பயன்களுடைய சரும முதிர்ச்சி தடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிப்பது சிறந்த தீர்வாகும். சாதாரண சரும பராமரிப்பு பொருட்கள் கண்களை சுற்றி சரியாக வேலை செய்யாது காரணம் அது உடலின் மிக மென்மையான பகுதியாகும். இதற்காக நீங்கள் கண் மருத்துவர் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்களுக்கு பிரத்யேகமான சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்கவும்.
6. மேற்கூறிய கடின முயற்சிகள் இருந்தாலும் உங்கள் சருமம் கண்டிப்பாக 30 வயதை கடந்ததும் முதிர்ச்சியை காட்டுகிறதென்றால், நீங்கள் தோல் மருத்துவரிடம் உங்கள் சருமத்தை பரிசோதித்து தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். எனவே உங்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சினையும் இல்லாவிடிலும் மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பரிசோதித்து சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் சருமத்தில் ஏதேனும் பிரச்சினைகளை உணர்ந்தால் வீட்டிலேயே தயாரிக்கும் அல்லது நீங்களே செய்து கொள்ளும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதைவிட தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.
7. 30 வயதை கடந்தவர்கள், சரும பராமரிப்பை மட்டும் கருத்தில் கொண்டிருக்க கூடாது. முடிகளும் முதிர்ச்சி அடைகிறது, எனவே சரும பராமரிப்போடு சிறந்த மற்றும் உரிய கேசத்திற்கான பராமரிப்பையும் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் சருமத்தை விட முடியின் முதிர்ச்சி உங்களுக்கு இன்னும் பத்து வயது கூடுதலாக ஆனது போன்ற ஒரு தோற்றத்தை காட்டிவிடும். ஆதலால் 30 வயது கடந்தவர்களுக்கு சரும பராமரிப்போடு கேசத்திற்கான பராமரிப்பிலும் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்