search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில்கள் ரத்து"

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று (சனிக்கிழமை) இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரெயில், இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில், இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில், இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரெயில், இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரெயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.50, 8.55, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில், காலை 3.50, 6 மணி, 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி செல்லும் ரெயில், காலை 4.15, 5.15, 6.20, 7.15, 7.30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில், காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில், காலை 4.30, 5 மணி, 5.40, 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயில், காலை 5.30, 6.30, 7 மணி, 8.20, 9.10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 5.20, 5.55 மணிக்கு செல்லும் மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு காலை 9.10 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில்கள், ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி இன்று இரவு 10 ரெயில்களும், நாளை 84 ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 3.50, 5 மணி, 6.50, 8.40, 9.35 மணிக்கு திருவள்ளூருக்கு சிறப்பு ரெயில்கள் புறப்படும்.

    மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.15 மணிக்கு அரக்கோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் புறப்படும், காலை 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து சிறப்பு ரெயில் திருத்தணிக்கு புறப்படும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×