search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதக்கும்"

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர். 

    • எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

    சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×