search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு"

    • நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம்
    • குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குடும்பத்தோடு இன்று பொங்கலிட்டு மகிழ்ந்தார். அவர் தமி ழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினரும் பொங்க லிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் ஏராளமானோர் ஆர்வமாக வந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    • விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை பார்வையிட்டு ஆய்வு
    • போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த ஆண்டு இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகள் எத்த னை பேர் கைது செய் யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந் தார்.

    பின்னர் விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சப் இன்ஸ்பெக் டர்கள் முத்துக்குட்டி, சதீஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருட்டை தடுக்க போலீசார் புது வியூகம்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்டி-விசனுக்கு உட்பட்ட 400 போலீசார் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன் குமார், ராஜா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், வடம் இழுத்தல், பேட்மிண்டன், கிரிக்கெட் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியை தொடங்கி வைத்து மாவட்ட போலீஞஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட போலீசாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களாக மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்று தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் ஊர்க்காவல் படையினர், போலீசார் கலந்து கொண்டு உள்ளனர், 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வெற்றி பெறுவதற்கான இறுதி போட்டிகள் வருகிற 9-ந் தேதி நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஜெயிலிலிருந்து வெளியே வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு குற்றவாளிகள் யாராவது வெளியே வந்து உள்ளார்களா? என்பது குறித்த விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளில் சி.சி.டி.வி. காமிராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும் இதன் மூலமாக குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் நாகர்கோவில் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    வருகிற 6 மாத காலத்திற்குள் ஒவ்வொரு சப் -டிவிசனிலும் தலா 200 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபி ஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் தென் மண்டலத்தைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர் வருகை தர உள்ளனர்.

    3 எஸ்.பி.க்கள் 4 ஏ.எஸ்.பி.க்கள் 20 டி.எஸ்.பி.க்கள் 57 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்,

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவிலுக்குள் கம்புகள் மூலமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட்டம் குறைந்த பிறகே அந்த இடத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மருத்துவ வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • வெளி மாவட்டத்திற்கு சென்ற போலீசார்

    நாகர்கோவில்:

    தமிழக காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத 5 ஆயிரத்து 888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஆரல்வாய் மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

    நாகர்கோவில்  பொன் ஜெஸ்லி கல்லூரியில் பெண்களுக்காக தனித் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு வந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். கல்லூரி வாசலில் அவர்களை விட்டு விட்டு வெளியே காத்திருந்தனர். பெண்கள் கொண்டு வந்திருந்த கைப்பைகளையும் வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத உள்ளே சென்றனர்.

    மற்ற தேர்வு மையங்களிலும் காலையிலேயே தேர்வு எழுதுபவர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு கூட சீட்டினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

    அதை பரிசோதனை செய்தபிறகே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன்கள், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து மதியத்திற்கு பிறகு தேர்வு நடைபெறுகிறது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் பெரும்பாலானவர் அந்தந்த தேர்வு மையங்களிலேயே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதுபவர் களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    குமரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் பலரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு குமரி மாவட்டத்திற்குள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான போலீசாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த போலீசார் அனைவரும் நேற்று இங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

    ×