search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு கொட்டகை"

    • 20 மாடுகளுக்கு காயம்
    • இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் மடத்து ஏலா பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பிகா (வயது 45).

    இவர், அப்பகுதியில் பசுமாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் உள்ள கொட்டகையில் சுமார் 22 பசுக்களும், 5 கன்றுகளும் உள்ளன. இந்தப் பசுக்களை பராமரித்தல் மற்றும் கறவை செய்வதற்கு ஒரு வட இந்திய குடும்பத்தினரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    நேற்று அதிகாலையில் வழக்கம் போல் அந்தக் குடும்பத்தினர் பசுக்களி லிருந்து பால் கறந்து விட்டு, பின்னர் தண்ணீ ரும், தீவனமும் வைத்து விட்டு பண்ணை கொட்டகை அருகிலுள்ள தங்களது குடி யிருப்பில் சென்று தூங்கி யுள்ளனர்.

    இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் கொட்டகையின் கூரை தீ பிடித்து எரிவதை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து கூச்சலிட்டதுடன், ஓடி சென்று பண்ணை யை பரிமரிக்கும் குடும்பத்தி னரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அனைவருமாக சேர்ந்து தீயை அனைத்து பசுக்களையும் கன்றுகளை யும் மீட்டுள்ளனர். இச்சம்ப வத்தில் 20 பசுக்கள் தீக்கா யம் அடைந்தன.

    இதையடுத்து தகலறிந்த பசுக்களை பராமரிக்கும் தனியார் கால் நடை மருத்து வர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு கால்நடை மருத்துவர் ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் விரைந்து வந்து தீக்காயமடைந்த பசுக்க ளுக்கும், கன்றுகளுக்கும் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நாகர்கோவி லில் இருந்து கால்நடை அவசர மருத்துவக் குழு ஆம்புலன்சுடன் விரைந்து வந்து காயமடைந்த பசுக்க ளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறும் போது, பசுக்களுக்கு தேவையான சிகிச்ைசகள் அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றனர். சம்பவ இடத் திற்கு திற்பரப்பு கிராம நிர்வாக அலுவலர் நவ நீதன் மற்றும் வார்டு உறுப்பி னர் ராஜப்பன் ஆகி யோர் நேரில் சென்று காய மடைந்த பசுக்களை பார்வையிட்டனர்.

    இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது. கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறிகளின் இணைப்பி லிருந்து மின்கசிவு ஏற் பட்டு, கொட்டகையின் உள்பக்கம் குளிர்ச்இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.க்காக போட்டப்பட்டிருந்த தென்னை ஓலைகள் தீ பரவியுள்ளதுடன், தீயில் எரிந்த தென்னை ஓலைகள் பசுமாடுகளின் மீது விழுந்து மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×