search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாகாளியம்மன் கோவில்"

    • 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு கடைவீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலின் கட்டடங்கள் பல பகுதிகளில் சிதிலமடைந்து உள்ளது. கோவிலை இடித்துவிட்டு புதுப்பித்துக் கட்ட பலமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.

    இந்தநிலையில் நேற்று கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் ராமசாமி,சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை, பாலசுப்பிரமணியம், ராம். கண்ணையன், விமல் பழனிச்சாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து செயல் அலுவலர் ராமசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கோவில் கட்டுமான பணிக்கு கடந்த ஆண்டிலேயே அனுமதி கிடைத்து விட்டது. கோவிலுக்கு முன் உள்ள கடைகளில் வாடகைக்கு உள்ளவர்களை காலி செய்ய ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் காலி செய்தவுடன் பாலாலயம் செய்து கோவில் திருப்பணிகள் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.  

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.
    • நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூரில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48ம் நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றுது.நிறைவாக தீபாராதனை நடைபெற்றது.மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.மண்டல பூஜையை தென் சேரி மலை ஆதீனம் முத்து சிவ இராமசாமி அடிகளார் தலைமையில், அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    • கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.
    • யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
    • 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் - தாராபுரம் ரோடு கரட்டாங்காடு சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    நாளை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
    • தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, மயிலாடி யில், பழமையான செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷக விழா, 5-ந் தேதி, மங்கள இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, இரண்டாகாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடந்தது. காலை, 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கு சம கால கும்பாபிேஷகமும், பின்னர், செல்வ விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

    இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தினை முருங்கத்தொழுவு கிராம பிரலிங்கேஸ்வரர் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவாகம ரத்னம் சிவஸ்ரீ. அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரி–யார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சலூர் அருகில் கிளாம்பாடிகிராமம் கருமாண்டாம் பாளையத்தில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கருப்பண்ணசாமி, பொட்டுசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக நிகழ்ச்சிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    ×