search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில் கடத்தல்"

    மது பாட்டில்கள் கடத்திய ஆம்னி பஸ் மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பஸ்சில் 25 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பஸ்சுடன் அதனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சீனிவாசன் (வயது40) மற்றும் நாகூரை சேர்ந்த கிளீனரை கைது செய்தனர்.

    இதேபோல் பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை நோக்கி சென்ற சரக்கு வேனையும் போலீசார் சோதனையிட்டனர். அதில் 15 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

    அதனையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த பேச்சிமுத்து (20), முருகன் (30), தென்காசி விவேகானந்தன்(22) ஆகியோரை கைது செய்தனர்.

    மது கடத்தல் குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில் - கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.

    அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.

    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டிலகள் கடத்தப்பட்டது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர்கள் காரில் சோதனை நடத்தினர். அந்த காரில் 192 மது பாட்டில்களும், 44 பீர் பாட்டில்களும் இருப்பதை கண்டு பிடித்தனர். உடனே அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 35) என்பதும், புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து டிரைவர் தியாகராஜனையும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுப்பாட்டில்களை திண்டிவனம் மது விலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப் படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.#tamilnews
    ×