search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்"

    • ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை போன்றவை நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
    • பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் 3-ம் நாள் விழா முதல் 10-ம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் 2-வது நாள் அதிகாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம வேள்வி, காலை 7 மணிக்கு ஸ்ரீமத்பாகவத மாகாத்மிய பாராயணம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, நண்பகல் 12 மணிக்கு சமய மாநாடு, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், 3-வது நாள் மாலை 5.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கதைகளி நடக்கிறது.

    4-ம் நாள் காலை 11 மணிக்கு அகவல் பாராயணம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, 5-ம் நாள் மாலை 6.30-க்கு ஆன்மிக சிறப்புரை, இரவு 10.30 மணிக்கு நாட்டிய நடனம், 6-ம் நாள் காலை 9 மணி முதல் பஜனை போட்டி, இரவு 10.30 மணிக்கு குரு சிவச்சந்திரனின் ஆன்மிக அருளுரை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெறும்.

    7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் சொற்பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர மகா சபைக் கூட்டம், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 10.30 மணிக்கு புராண நாடகம் நடக்கிறது.

    8-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை, 9-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10.30 மணிக்கு வேடம் புனைந்த விசாரணை மன்றமும் நடைபெறுகிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • ஆன்மீக சமய மாநாட்டை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்

    நாகர்கோவில்:

    பிரசித்தி பெற்ற மண் டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திரு விழா வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30-க்கு உஷபூஜை நடக்கி றது. 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொ டியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்ம னுக்கு பூஜை பொருட்கள் கொண்டுவருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, 6-8 ஸ்ரீ ராஜரா ஜேஷ்வரி பூஜையும், 10,001 திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

    கலை நிகழ்ச்சிகளாக 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்மிக சமய மாநாடு நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞான சேகர் வரவேற்கிறார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன், மனோதங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பேருரை யாற்றுகின்றனர்.

    விஜய்வசந்த் எம்.பி. பிரின்ஸ் எம்.எல்.ஏ, நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக் காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணை தலைவர் சுஜி ஆகியோரும் பேசுகின்றனர். சுகிசிவம் ஆன்மிக உரையாற்றுகி றார். விழாவில் கணவரை இழந்து வாழும் 50 ஏழை இந்து பெண்களின் வாழ் வாதார மேம்பாட்டிற்கு உதவித்தொகை, பெற் றோரை இழந்து வாழும் ஏழை இந்து மாணவர் கள் 100 பேருக்கு உதவித் தொகை ஆகியன வழங் கப்படுகிறது.

    கோவில் மேல்சாந்தி பகவதி குருக்கள் நன்றி கூறுகிறார். மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசையும், இரவு 8 மணிக்கு பக்தி நெறி நன்கு வளர்த்துள்ளது. வளர வேண்டும் என்ற தலைப் பில் சுகிசிவம் நடுவராக கொண்டு வழக்காடு மன் றம் நடக்கிறது. விஜயசுந்தரி, ராஜாராம் ஆகியோர் பேசுகின்றனர்.

    2-ம் நாள் விழாவில் மார்ச் 6-ந் தேதி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு. 5-க்கு கணபதி ஹோமம், பகல் 12-க்கு அம்ம னுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத் தேர் உலா, இரவு 9-க்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் அம்பாள் பெருமை பற்றி கார்த்திகா ராஜா பேசுகி றார். இரவு 8-க்கு பரத நாட்டிய நிகழ்வு நடக்கிறது.

    3-ம் நாள் விழாவில் 7-ந் தேதி காலை 4.30-க்கு திரு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 1-க்கு உச்சகால பூஜை, மாலை 5.30-க்கு பவுர்ணமி திருவிளக்கு பூஜை, 6-க்கு தங்கத் தேர் உலா. இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சிவசங்கரின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு கதகளி ஆகியன நடக்கிறது.

    4-ம் நாள் விழாவில் 8-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம் மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 12-க்கு சந்தன குட பவனி, 1-க்கு உச்சகால பூஜை, மாலை 6-க்கு தங்கத் தேர் உலா, மாலை 6.15-க்கு சந்தனக்குட பவனி, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் தேச மங்கையர்கரசி பேசுகிறார். இரவு 8 மணிக்கு மகதி குழுவினரின் கர்நாடக மற்றும் பக்தி இன்னிசை நடக்கிறது.

    5-ம் நாள் விழாவில் 9-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9-க்கு அத்தாழ பூஜை, 9.30-க்கு அம்மன் வெள் ளிப்பல்லக்கில் எழுத்தரு ளல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு கோமதி திருநாவுக்கரசுவின் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் ஆகியன நடக்கிறது.

    6-ம் நாள் விழாவில் 10-ந் தேதி காலை 6.30-க்கு உஷ பூஜை, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், பகல் 12 மற்றும் 12.30க்கு சந்தன குட பவனி, 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 தங்கத்தேர் உலா, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு மேல் 12-க்குள் வலியபடுக்கை பூஜை ஆகியன நடக்கி றது. மாலை 6.30-க்கு சிவசங்கரின் சமய சொற் பொழிவு, இரவு 8-க்கு வீர மணி ராஜு குழுவினரின் பக்தி இன்னிசை ஆகியன நடக்கிறது.

    7-ம் நாள் விழாவில் 11-ந் தேதி காலை 4.30-க்கு நடை திறப்பு, 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6-க்கு தங்கத்தேர் உலா, இரவு 7-க்கு சிறப்பு வில்லிசை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு சமய சொற்பொழிவில் ராஜா ராம் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இளசை சண்முகம் குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிறது.

    8-ம் நாள் விழாவில் 12-ந் தேதி காலை 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக் கில் எழுந்தருளல், 12.30-க்கு மாவிளக்கு பவனி வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நடக்கிறது. மாலை 6.30-க்கு கோமதி திருநாவுக் கரசு சமய சொற்பொழிவு, இரவு 8-க்கு சுசித்ரா பால சுப்பிரமணியனின் பக்தி இன்னிசை சொற்பொழிவு ஆகியன நடக்கிறது.

    9-ம் நாள் விழாவில் 13-ந் தேதி காலை 9-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 11-க்கு சந்தனகுட பவனி, பகல் 12-க்கு சந்தனகாப்பு காவடி, பகல் 1-க்கு உச்சகால பூஜை, இரவு 9.30-க்கு பெரிய சக்கர தீவட்டி பவனி வருதல் ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சமயசொற்பொழிவில் மோகன சுந்தரம் பேசுகிறார். இரவு 8-க்கு ஆய்க்குடி குமார் குழுவினரின் பஜன்ஸ் நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், அதிகாலை 3.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், காலை 4.30-க்கு அடியந்திர பூஜை, காலை 6 மணி முதல் குத்தியோட்டம், மாலை 6-க்கு தங்கத்தேர் உலா, மாலை 6.30 -க்கு சாயரட்சை பூஜை, இரவு 9-க்கு அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது.

    இரவு 9.30-க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், இரவு 12. மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக் கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகியன நடக்கிறது. மாலை 6.30-க்கு சுந்தரராமின் சமய சொற்பொழிவு. இரவு 8-க்கு ஹரி கதை மற்றும் இன்னிசை விருந்து ஆகியன நடக்கிறது.

    8-ம் கொடை விழா மார்ச் 21-ந் தேதி சிறப்பு பூஜையுடனும், மார்ச் 25-ந் தேதி மீனபரணி கொடை விழா வலியபடுக்கை பூஜை யுடனும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே இந்த பூஜை நடக்கும்

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா மாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமை நிறைவு பெறும் விதத்தில் பத்து நாட்களுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருக்கொடியேறி 10 நாட்கள் நடக்கிறது.

    நேற்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக் கப்பட்டு 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபி ஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை நடந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.

    அப்போது பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த பூஜை மாசி திருவி ழாவின் 6-ம் நாள், மீனபரணி கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் இந்த பூஜை நடைபெறும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது.

    அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிப்பட்டு இருந்தது. கோவி லில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவ சத்தால் சரணகோஷம் எழுப்பினார்கள். இப் பூஜை யில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வலிய படுக்கை பூஜையை காண கேரளாவில் இருந் தும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். பூஜையின் போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ×