மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே இந்த பூஜை நடக்கும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா மாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமை நிறைவு பெறும் விதத்தில் பத்து நாட்களுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருக்கொடியேறி 10 நாட்கள் நடக்கிறது.

நேற்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக் கப்பட்டு 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபி ஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை நடந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.

அப்போது பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த பூஜை மாசி திருவி ழாவின் 6-ம் நாள், மீனபரணி கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் இந்த பூஜை நடைபெறும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது.

அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிப்பட்டு இருந்தது. கோவி லில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவ சத்தால் சரணகோஷம் எழுப்பினார்கள். இப் பூஜை யில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வலிய படுக்கை பூஜையை காண கேரளாவில் இருந் தும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். பூஜையின் போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com